Greator Noida Woman Dowry Murder Case (Photo Credit: @TheHeadliner_in X)

ஆகஸ்ட் 24, நொய்டா (Uttar Pradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா பகுதியில் வசித்து வருபவர் நிக்கி. இவரது கணவர் விபின். கடந்த 2016 ஆம் ஆண்டு தம்பதிக்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. திருமணத்தின்போது மணப்பெண் வீட்டார் சார்பில் புதிய எஸ்யூவி கார் மற்றும் பிற பொருட்களை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இதனிடையே மனைவியிடம் வரதட்சணை தொகை போதாது என தொந்தரவு செய்து வந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் நிக்கியை அடித்து கொடுமை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. தேனி: "என் லவ்வர் கூட போறேன்.. தேடி வராதீங்க" - கூலி வேலை செய்து காப்பாற்றிய தந்தையை தவிக்கவிட்டு சென்ற நர்சிங் மாணவி.! 

மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் :

வரதட்சணை விவகாரத்தில் கணவன் - மனைவி இடையே கடந்த சில ஆண்டுகளாக மோதல் போக்கும் நீடித்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றிய விபின் அவரை எரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தை மகன் கண்முன்னேயே அரங்கேற்றிய நிலையில், காவல்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிந்து (Nikki Murder Case) விசாரித்த போது அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நிக்கியின் மகன், அப்பா தனது அம்மாவை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்ததாக கூறியிருக்கிறார்.

கிரேட்டர் நொய்டாவில் மகன் கண்முன் மனைவியை கணவன் எரித்துக்கொன்ற பதறவைக்கும் வீடியோ :

தப்பியோட முயன்ற குற்றவாளி சுட்டுப்பிடிப்பு :

படுகாயத்துடன் மீட்கப்பட்ட பெண்மணி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டபோது சிகிச்சை பலனின்றி சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கணவரின் சகோதரர் ரோஹித், இவர்களின் தாயார், தந்தை ஆகியோர் மீது அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை செய்தனர். தொடர்ந்து குற்றவாளியான விபினை கைது செய்த காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்து செல்லும்போது, அவர் தப்பியோட முயன்றதால் காலில் சுட்டு பிடித்தனர்.

என்கவுண்டரில் படுகாயமடைந்த விபின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வீடியோ :

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3