Theni Nursing Student Sends Message About Eloping With Lover (Photo Credit : FB / Pixabay)

ஆகஸ்ட் 24, தேனி (Theni News): தேனி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் 40 வயதுடைய நபர் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், 19 வயதான மூத்த மகள் நர்சிங் படிப்பதற்காக ஆசைப்பட்டுள்ளார். இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் தனது மகளை சேர்த்த தொழிலாளி, அவரது படிப்பு செலவுக்காக பல இடங்களில் வேலை செய்து வந்துள்ளார். தற்போது அவரது 19 வயது மகள் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் பயின்று வருகிறார்.

கல்லூரிக்கு விடுமுறை :

விடுமுறை நாட்களில் அவ்வப்போது ஊருக்கு அவர் வந்து செல்வதும் வழக்கம் எனக்கு கூறப்படுகிறது. இதனிடையே கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி மாணவி தனது தந்தையின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு, கல்லூரிக்கு 20 நாட்கள் விடுமுறை விடப்பட்டதால் ஊருக்கு வருவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசியவர் தனது செல்போனில் சார்ஜ் இல்லை என்றும், ஊருக்கு விரைவில் கிளம்ப இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேட்டு மகிழ்ச்சியடைந்த பெற்றோர், தங்களது மகளின் வருகைக்காக காத்திருந்தனர். Chennai News: மின்வாரிய அதிகாரிகளின் 100% அலட்சியம்.. சென்னை தூய்மை பணியாளர் பலியான விவகாரத்தில் உறவினர்கள் குமுறல்.! 

காதலிக்கும் பையனுடன் ஓடிப்போவதாக தந்தைக்கு மெசேஜ் :

இந்நிலையில் தனது தந்தையின் செல்போனுக்கு மெசேஜ் அனுப்பியவர், "நான் ஒருவரை காதலிக்கிறேன். அந்த பையனுடன் செல்கிறேன். என்னை தேடி வராதீர்கள், உங்களுக்குத்தான் பணம் செலவாகும். எனக்கு நீங்கள் யாரும் வேண்டாம்" என தெரிவித்துள்ளார். இதனைக் கண்டு பதறிய பெற்றோர் உடனடியாக மகளுக்கு தொடர்பு கொண்டபோது அவரது செல்போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது. இதனால் காவல்நிலையத்தில் தனது மகளை காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

போலீசார் விசாரணை :

இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவியை தேடி வரும் நிலையில், மாணவிதான் மெசேஜ் அனுப்பினாரா? அல்லது மாணவியின் செல்போனை வைத்து வேறு யாரும் மெசேஜ் அனுப்பியுள்ளார்களா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் காணாமல் போன மாணவியையும் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.