செப்டம்பர் 04, சென்னை (Chennai News): இன்னும் 3 நாட்களில் செப்டம்பர் 7-ஆம் தேதி சந்திர கிரகணம் நிகழ்கிறது. இது 2025 ஆம் ஆண்டின் இறுதியான முழு சந்திர கிரகணம் ஆகும். சந்திர கிரகணத்தின் போது கிரக நிலையில் ஏற்படும் மாற்றத்தால் சில ராசிகள் கவனமாக இருக்க வேண்டும் என ஜோதிட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் வரும் ஞாயிற்றுக்கிழமை நிகழும் கிரகணத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசி குறித்து தெரிந்து கொள்ளலாம். கும்ப ராசியில் தற்போது நிகழும் சந்திர கிரகணம் ராகுவுடன் சந்திரன் இணையும் நிகழ்வாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் சிம்ம ராசியில் சூரியன் கேதுவுடன் இருக்கிறார். இது ஜோதிட ரீதியாக மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கீழ்காணும் 5 ராசிக்காரர்கள் அதிக சவால்களை எதிர் கொள்ள நேரிடும். Chandra Grahan 2025: பௌர்ணமியில் சந்திர கிரகணம்.. கிரிவலம் செல்லலாமா?.. பக்தர்களே தெரிஞ்சிக்கோங்க.!
ரிஷபம் :
ரிஷப ராசிக்காரர்கள் நிதி, ஆரோக்கியம் தொடர்பான சிக்கலை சந்திக்கலாம். நாள்பட்ட நோய்கள் மோசமடைந்து மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். இதனால் பொருளாதார சுமை கூடும். பழைய கடன்கள் நீடித்து மனச்சுமையை ஏற்படுத்தும். வீண் செலவுகளை குறைத்து பணத்தை கையாளுவதில் கவனமாக இருப்பது நல்லது.
மிதுனம் :
மிதுன ராசியினரின் குடும்ப வாழ்க்கையில் சுமை அதிகரித்து குழந்தைகளின் கல்வி செலவு குறித்த கவலை ஏற்படும். மேலும் உடல் நிலையும் கவலை தரலாம். மனைவி, பெற்றோருடன் வீண் விவாதங்களை தவிர்க்கலாம். பணியிடத்தில் கூடுதல் பணி சுமை, சக ஊழியரின் துரோகம், அரசு விவகாரத்தில் பிரச்சனை போன்றவை அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
சிம்மம் :
சிம்ம ராசிக்காரர்களின் வியாபாரத்தில் சிக்கல் ஏற்படும். பங்குச்சந்தை முதலீடுகளில் பங்குதாரர்களுடன் நிதி தொடர்பான முரண்பாடுகள் ஏற்படும். தொழில் போட்டி அதிகரிக்கும். குழுவான பணிகளில் சிரமம் இருக்கலாம். வீட்டில் துணைவருடன் மனக்கசப்பு ஏற்படலாம்.
துலாம் :
செலவுகள் அதிகரித்து சேமிப்பு குறையும். இதனால் நிதி பற்றாக்குறை ஏற்படும். வேலையில் தாமதம், எதிர்பாராத நஷ்டங்கள் போன்றவை மன அழுத்தத்தை ஏற்படுத்தும். எதிர்காலம் குறித்து பாதிப்பு இருக்கலாம். உடன் இருப்பவர்கள் ஆதரவு தருவதால் தாக்கம் குறைவாக இருக்கும்.
கும்பம் :
நடப்பு சந்திர கிரகணத்தில் அதிக தாக்கத்தை எதிர்கொள்பவர்கள் கும்ப ராசிக்காரர்கள். வியாபாரத்தில் நஷ்டம், திடீர் விபத்து செலவுகள், சவால்கள் போன்றவை ஏற்படும். பணியிடத்தில் சிக்கல், அதிகாரியின் பணிச்சுமை அழுத்தம் போன்றவையும் ஏற்படும். குடும்பத்திலும் கருத்து முரண், அனுபவமில்லாத முதலீடு காரணமாக இழப்பு போன்றவை ஏற்படும்.