மே 29, சூரத் (Gujarat News): மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள சத்ரபூரை சேர்ந்த மடாதிபதி தீரேந்திர கிருஷ்ண சாஸ்திரி (Dhirendra Krishna Shastri) என்ற பாகேஷ்வர் தாம் சர்க்கார். இவரின் மீது மக்களின் அறியாமையை பயன்படுத்தி ஏமாற்றியதாக குற்றசாட்டு முன்வைக்கப்படுகிறது.
இவரை ஆதரிக்க இருக்கும் நபர்களின் மூலமாக, அவர்களுக்கு பல போதனைகளை வழங்கி வரும் தீரேந்திர சாஸ்திரி, பல மாநிலங்களுக்கும் சென்று தனது ஆன்மீக சொற்பொழிவை தந்து வருகிறார். Assam Earthquake: அசாம் மாநிலத்தில் திடீர் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு.!
இந்த நிலையில், குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகரில் நடைக்கேற்ற விழாவில் கலந்துகொண்ட தீரேந்திர சாஸ்திரி, மக்களிடையே உரையாற்றினார். அப்போது, அவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
அதாவது, "குஜராத் மக்களிடம் இருக்கும் ஒற்றுமையை நான் பாராட்டுகிறேன். இந்த ஒற்றுமை நம்மிடையே தொடர்ந்தால் இந்தியாவை மட்டுமல்லாது பாகிஸ்தானையும் இந்துக்களின் தேசமாக்கலாம்" என கூறினார்.
#WATCH | "...The day people of Gujarat become united like this, not only India but we will also make Pakistan a Hindu nation..," says Bageshwar Dham's Dhirendra Shastri in Surat, Gujarat (27.05.2023)
(Video: Bageshwar Dham's YouTube channel) pic.twitter.com/x9uw9D8anm
— ANI (@ANI) May 29, 2023