பிப்ரவரி 17, கலைஞர் நகர் (Tirupattur News): திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கலைஞர் நகர் பகுதியில், தேசிய நெடுஞ்சாலையில் தம்பதிகள் தங்களின் இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டு இருந்தனர். அப்போது, தம்பதிகளுக்கு பின்னால், குறிப்பிட்ட இடைவெளியில் கார் மற்றும் லாரி ஆகிய வாகனங்கள் வந்துகொண்டு இருந்தது. இதனிடையே, எதிர்பாராத விதமாக நாய் ஒன்று தேசிய நெடுஞ்சாலையில் குறுக்கே ஓடியது. இந்த சம்பவத்தில் நாய் இருசக்கர வாகனத்திற்கு நடுவே புகுந்து ஓடிவிடவே, தம்பதியின் வாகனம் நிலைதடுமாறியது. நூலிழையில் உயிர்தப்பிய ரைடர்கள்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ.. வாகன ஓட்டிகளே அலட்சியம் வேண்டாம்.!
அதிஷ்டவசமாக தப்பிய உயிர்கள்:
இதனால் தம்பதிக்கு பின்னால் வந்த கார் ஓட்டுனர் உடனடியாக சுதாரித்து பிரேக் பிடித்தார். அந்த வாகனத்திற்கு பின்னால் லாரி ஒன்று வந்துகொண்டு இருந்த நிலையில், லாரி ஓட்டுநர் விரைந்து வாகனத்தை நிறுத்த முயற்சித்தும் பலனில்லை. காரின் மீது மோதி லாரி நின்றது. இதனால் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் தம்பதியில் மனைவி நாய் குறுக்கே புகுந்து சாலையில் விழுந்து காயமடைந்தார். கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில், தம்பதியில் கணவர் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டு லேசான காயம் அடைந்தார். நல்வாய்ப்பாக பெரும் அசம்பாவித விபத்து ஓட்டுனர்களின் சாமர்த்தியத்தால் தவிர்க்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பான காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
நாய் குறுக்கே புகுந்ததால் காயமடைந்த தம்பதி:
#WATCH | திருப்பத்தூர்: கலைஞர் நகரில் சட்டென சாலையை குறுக்கிட்ட நாயால் விபத்து - பைக், கார், லாரி என அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து.
நல்வாய்ப்பாக பைக்கில் வந்த இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர் - பரபரப்பு சிசிடிவி காட்சி#SunNews | #Accident | #Tirupathur pic.twitter.com/e0ZzQcdi7d
— Sun News (@sunnewstamil) February 17, 2025