ஏப்ரல் 20, குருகிராம் (Haryana News): ஹரியானா மாநிலத்தில் உள்ள குருகிராம் பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்களில், சட்டவிரோதமாக விபச்சார தொழிலும் நடத்தப்பட்ட வருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து, ஸ்பா (Spa Prostitution in Gurugram) மையங்கள் குறித்த விபரங்களை சேகரித்த காவல் துறையினர், அங்கு அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். மேலும், ஒரு ஸ்பா ஒன்றில் காவல் அதிகாரி மாற்று சீருடையில் வாடிக்கையாளர் போலவும் நேரில் சென்று இருக்கிறார். அங்கு ஸ்பா அறைக்கு அழைத்து செல்லப்பட்ட அதிகாரியிடம் பேரம் பேசப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்களாக வந்திருந்த இளைஞர்கள் பலரும், ஸ்பாவில் பணியாற்றும் பெண்களுடன் தனிமையில் இருந்துள்ளனர். Dog Return Home after Treatment: திருடனை பிடிக்க முயற்சித்து குண்டடிபட்ட நாய்; 54 நாட்களுக்கு பின் உடல்நலம் முன்னேற்றம்.. கைதட்டி மகிழ்ச்சி.! 

Spa Prostitution Center (Photo Credit: @TrueStoryUP X)

பெண்கள் மீட்பு, உரிமையாளர்களுக்கு வலைவீச்சு: இதனையடுத்து, நிகழ்விடங்களில் விபச்சாரம் நடைபெறுவதை உறுதி செய்த அதிகாரிகள், அங்கு பணியில் இருந்த 17 பெண்களை மீட்டனர். மேலும், அவர்களிடம் வாடிக்கையாளர்களாக வந்த 8 இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர். 5 ஸ்பா மையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டு மூடுவிழா நடத்தப்பட்டன. பீகார், டெல்லி மற்றும் பல மாநிலத்தை சேர்ந்த பெண்களை வைத்து ஸ்பா பெயரில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட ஸ்பா உரிமையாளர்கள் கமல், ஷைலேந்திரா, பவான், பிரியான்ஷூ, பங்கஜ் ஆகியோரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.