மார்ச் 25, புதுடெல்லி (New Delhi): இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய மருந்து மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தின் உரிய பரிசோதனை மற்றும் அனுமதிக்கு பின்னர் இந்திய சந்தைகளில் விற்பனைக்கு அனுமதிக்கப்படுகிறது. மருந்துகளை வைத்து வியாபார ரீதியாக சம்பாதிக்கும் கும்பல் பல்வேறு வழிகளில் மாத்திரைகளை தயாரித்து அதனை மக்களுக்கு திரைமறைவில் விற்பனை செய்வதும் நடந்து வருகிறது.
ஆன்டிபயாட்டிக் மாத்திரையில் கவனம்: இதனை சுகாதாரத் துறை குழு கண்காணித்து அவ்வப்போது அது தொடர்பான எச்சரிக்கையை கொடுத்து வருகிறது. இன்றளவில் மருத்துவரின் பரிந்துரை இன்றி ஆண்ட்டிபயாட்டிக் போன்ற மாத்திரைகளை பலரும் எடுத்துக் கொள்வது நடந்து வந்தது. இது தொடர்பான தகவல் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை: இதனால் மக்களின் நலன் காக்கும் பொருட்டு மத்திய சுகாதாரத் துறை உரிய பயிற்சி பெற்ற மருத்துவரின் ஆலோசனை இன்றி ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை நிறுவனம் செய்து ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்திக்குறிப்பில், சிவப்பு நிறத்தினால் குறிக்கப்பட்டுள்ள ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை என்று எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
वह एंटीबायोटिक्स जिनके पैकेजिंग पर लाल रेखा पायी जाती है, उनको बिना किसी पात्रित डॉक्टर के परामर्श के बिना नहीं खाया जाना चाहिए।
सचेत रहें, सुरक्षित रहें।
.
.
.#AntibioticResistance#ReadTheRed pic.twitter.com/QI8KJNDGz8
— Ministry of Health (@MoHFW_INDIA) March 26, 2024