ஆகஸ்ட் 18, புதுடெல்லி (New Delhi): மேற்குவங்கம் மாநிலத்தில் உள்ள கொல்கத்தா (Kolkata) ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், முதுநிலை மருத்துவம் பயின்றவாறு, பணியாற்றி வந்த 28 வயதுடைய பயிற்சி பெண் மருத்துவர், சஞ்சய் ராய் என்பவரால் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். பெண் மருத்துவரின் உடலில் அந்தரங்க உறுப்புகள், முகம், உதடுகள், கழுத்து, வயிறு, விரல்கள் மற்றும் கணுக்கால் பகுதிகளில் கடுமையான காயங்கள் தென்பட்டன. Young Woman Suicide Attempt: பாலத்தில் இருந்து குதித்த இளம்பெண்; தலை முடியை பிடித்து காப்பாற்றிய ஓட்டுநர்.. வீடியோ வைரல்..!
சிபிஐ விசாரணை:
பிரேத பரிசோதனையில் 150 மில்லி கிராம் அளவிலான உயிரணுக்கள் பெண் மருத்துவரின் உடலில் இருந்தது தெரியவந்தது, கால்களும் 90 டிகிரி எதிர் கோணத்தில் திருப்பி உடைக்கப்பட்டு இருந்தது. இதனிடையே மாணவியின் மரணத்திற்கு நீதிகேட்டு தேசிய அளவில் மருத்துவர்கள் போராடி வருகின்றனர். பெண் மருத்துவர் பணியாற்றி வந்த மருத்துவமனையும் சூறையாடப்பட்ட நிலையில், மேற்படி அசம்பாவிதம் நடக்காமல் இருக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது விசாரணை சிபிஐ வசம் உள்ளது.
உள்துறை அமைச்சகம் அறிவுரை:
இந்நிலையில், ஒவ்வொரு 2 மணிநேரத்திற்கு ஒருமுறை மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு தொடர்பான தகவலை மத்திய உள்துறை (Union Home Ministry) அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வாட்சப், பேக்ஸ் அல்லது அழைப்புகள் வாயிலாக ஒவ்வொரு மாநிலமும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு உத்தரவிட்டு இருக்கிறது. ஒரு துயர நிகழ்வு நடந்ததும் ஏற்படும் வன்முறையை கட்டுப்படுத்தவும், குற்றங்கள் நடக்காமல் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கவும் ஏதுவாக மாநில அரசுகள் ஒத்துழைத்து செயல்பட வழிவகை செய்ய வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.