நவம்பர் 13, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், நம்பள்ளி பகுதியில் தனியாருக்கு சொந்தமான அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பு வளாகத்தின் கீழ் தளத்தில் கார் ஓர்க் ஷாப் செயல்பட்டு வருகிறது. அங்கு டீசல், கெமிக்கல்கள் சேமித்து வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், கார் மெக்கானிக் தனது வேலையை கவனித்துக்கொண்டு இருந்தபோது, திடீரென தீ பிடித்து பற்றி எரியத்தொடங்கியுள்ளது. அங்கு டீசல் பேரல்கள் இருந்ததால், எளிதில் தீ முழுவதுமாக பரவியது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். SUV Hits 3 Bikes: தறிகெட்டு இயங்கி இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதி பயங்கர விபத்து: 4 பேர் படுகாயம்.!
ஆனால், அவர்கள் வருவதற்குள் தீ கட்டுக்கடங்காத அளவு பரவியுள்ளது. இந்த தீவிபத்தில் சிக்கி நால்வர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மேல்தளத்தில் வீட்டிற்குள் இருந்த 2 பெண்கள் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
தீயை கட்டுக்குள் கொண்டு வந்த தீயணைப்பு படையினர் தொடர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காலை 09:15 மணியளவில் விபத்து நடந்துள்ளது. விசாரணை நடந்து வருகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
விபத்தின் காட்சிகள்:
#WATCH | Six people have died in a fire at a godown located in an apartment complex in Bazarghat, Nampally of Hyderabad, says DCP Venkateshwar Rao Central Zone. pic.twitter.com/sXepmTPB2f
— ANI (@ANI) November 13, 2023
தீயின் வெப்பத்தில் சிக்கி, உடல் கருத்து மீட்கப்பட்ட தாயும்-மகனும்:
#WATCH | Daring rescue of a child and woman amid massive fire in a storage godown located in an apartment complex in Bazarghat, Nampally of Hyderabad pic.twitter.com/Z2F1JAL8wa
— ANI (@ANI) November 13, 2023