Rajasthan Weight Lifting Death (Photo Credit: @RishikeshViews X)

பிப்ரவரி 20, பிக்னோர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிக்னோர் மாவட்டம், நயா சாகர் பகுதியில் வசித்து வருபவர் யாஷ்திகா ஆச்சார்யா (Yashtika Acharya). 20 வயதாகும் யாஷ்திகா, பளு தூக்கும் வீராங்கனை ஆவார். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கமும் வென்றுள்ளார். மேற்படி வெற்றிகளுக்காக பயிற்சியும் எடுத்து வருகிறார். இதனிடையே, நேற்று முன்தினம் யாஷ்திகா பகுதியில் இருக்கும் உடற்பயிற்சி கூடத்தில், அவர் தொடர்ந்து பயிற்சி எடுத்து இருந்தார். அப்போது, சுமார் 270 கிலோ எடையுள்ள பளுவை அவர் பயிற்சியாளரின் உதவியுடன் தூக்க முற்பட்டார். அப்போது, பாரம் தாங்காமல் அவரின் கழுத்தில் பளு விழுந்துவிட, நிலைகுலைந்த அவர் கழுத்து உடைந்து கீழே விழுந்தார். Viral Video: முத்திப்போன ரீல்ஸ் மோகம்.. லைக்குக்காக ரயில் கீழே ரீல் விளையாட்டு.! 

பாரம் தாங்காமல் நேர்ந்த சோகம்:

அவரின் தலை பயிற்சியாளரின் மூக்கில் பட்டு, அவருக்கும் காயம் ஏற்பட்டது. இருவரையும் மீட்ட நபர்கள், உடனடியாக அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு சல்மானின் உயிர் பறிபோனது உறுதி செய்யப்பட்ட நிலையில், லேசான காயம் அடைந்த பயிற்சியாளர் தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் பயிற்சியின்போது அவரின் உயிர் பிரிந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், சம்பவம் குறித்து விசாரணையை முன்னெடுத்தனர். மேலும், பளு தூக்கும்போது அவரின் உயிர் பறிபோன சிசிடிவி கேமிரா காட்சிகள் வெளியாகியுள்ளன.

270 கிலோ கழுத்தில் விழுந்து நொடியில் பெண் உயிரிழந்த சோகம்: