Swiggy boy Rizwan -CCTV Footage Dog Byte (Photo Credit: Newstap / @jsuryareddy)

ஜனவரி 16, பஞ்சாரா: தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், பஞ்சாரா ஹில்ஸ் (Banjara Hills, Hyderabad) பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் ஷோபனா என்ற பெண்மணி கடந்த வாரம் Swiggy நிறுவனத்தில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

அவரின் உணவை ஸ்விக்கி பணியாளர் ரிஸ்வான் (வயது 23)  என்பவர் (Rizwan, Swiggy Delivery Boy) டெலிவரி செய்துள்ளார். அப்போது, ஷோபனாவின் வீட்டில் இருந்த ஜெர்மன் ஷெப்பட் நாய், ரிஸ்வானை துரத்தி கடித்துள்ளது. Ajith Kumar Wax Statue: அஜித்துக்கு மெழுகு சிலை வைத்த ரசிகர்கள்.. தமிழகம் முழுவதும் கொண்டுசெல்ல தடபுடல் ஏற்பாடு.!

இதனால் பதறிப்போன ரிஸ்வான் அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் இருந்து கீழே குதித்துள்ளார். இதனால் படுகாயத்துடன் மீட்கப்பட்ட ரிஸ்வான், நிஜாம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த ரிஸ்வான், நேற்று இரவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ரிஸ்வான் தனது குடும்பத்தை ஸ்விக்கி நிறுவனத்தில் வேலை பார்த்தே கவனித்து வந்துள்ளார்.

இதற்கிடையில் அவரின் மரணம் ஏற்பட்டுள்ள நிலையில், ரிஸ்வானின் குடும்பத்தினர் கண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் ஜனவரி 16, 2023 11:50 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).