ஜூன் 13, பெங்களூர் (Bangalore News): மேற்கு வங்கம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட 70 வயது பெண்மணி பிவா பால் (Biva Bal). இவருக்கு 39 வயதுடைய சேனாலி சென் (Senali Sen) என்ற மகள் இருக்கிறார். இவர்களுடன் சேனாலியின் அத்தை வசித்து வருகிறார். இவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர், பிழேகஹல்லி (Bilekahalli, Bangalore) பகுதியில் குடியேறி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.
70 வயது கொண்ட பிவா வயது மூப்பு காரணமாக அது சார்ந்த உடல்நலப்பிரச்சனையால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை பிஸியோதெரபிஸ்டான மகள் சேனாலி கவனித்து வந்துள்ளார். இருவருக்குள்ளும் தூக்க மாத்திரை போடுவது தொடர்பான பிரச்சனை நீண்ட மாதமாக இருந்து வந்துள்ளது. மகள் கொடுக்கும் மருந்துகளை தாய் சரிவர எடுத்துக்கொள்வதில்லை என தெரியவருகிறது. Online Gaming Framework By Modi Government: பந்தயம், அடிமையாக்கும், தீங்கு ஏற்படுத்தும் விளையாட்டுகளுக்கு இனி தடை வருகிறது – மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.!
இந்நிலையில், சம்பவத்தன்று இரவில் உறங்குவதற்கு சேனாலி 20 மாத்திரை கொடுத்ததும் பிவா-வுக்கு உறக்கம் ஏற்படவில்லை என தெரியவருகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேனாலி சென், தனது தாயை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர், அதனை போட்டோ எடுத்து தனது தந்தைக்கு வாட்சப் மூலமாக அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து, தாயின் உடலை சூட்கேசில் அடைத்த பெண்மணி, மிக்கோ லேஅவுட் (Mico Layout) காவல் நிலையத்திற்கு சென்று விஷயத்தை கூறி சரண் அடைந்துள்ளார். தாயின் உடல் சூட்கேசில் இருக்கும் செய்தி கேட்டு அதிர்ந்துபோன காவல் துறையினர், அதனை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.