மார்ச் 02, ஜகத்புரி (Delhi Crime News): சர்வதேச அளவில் மனிதர்கள் மீதான தாக்குதலுக்கு பெயர்பெற்று விளங்கும் பிட்புல் ரக நாயின் மூர்க்கத்தனம் அதிகமானது. அதனை வெளியே அழைத்து வரும் உரிமையாளர்கள், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்காத பட்சத்தில் நேரும் சோகம் அப்பாவி சிறு உயிர்களுக்கு கேடாக அமைகிறது.
7 வயது சிறுமி: புதுடெல்லியில் உள்ள ஜகத்புரி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், இளம்பெண் ஒருவர் திருமணம் முடிந்து தனது கணவர் மற்றும் 7 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்களின் வீட்டருகே வசித்து வரும் நபர் பிட்புல் ரக நாயினை வளர்த்து வருகிறார்.
சிறுமியை தாக்கிய நாய்: இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளார். அச்சமயம் அவரின் தாய் அருகில் இருந்தபோதும், பிட்புல் ரக நாய் அங்கு பராமரிப்பாளருடன் வந்து இருக்கிறது. அச்சமயம் நாய் எதிர்பாராத விதமாக சிறுமியை பயங்கரமாக தாக்கி கடித்து இருக்கிறது. Chris Green Suspended: சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்ட பிரபல கிரிக்கெட் வீரர் போட்டியில் விளையாட தடை; அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி: இதனால் உடலில் பல இடங்களில் நாய் கடித்த காயத்துடன் சிறுமி அலற, அக்கம் பக்கத்தினர் விரைந்து சிறுமியை மீட்டனர். பதற்றத்தில் தாய் செய்வதறியாது காவல் துறையினருக்கு தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, உடனடியாக நிகழ்விடத்திற்கு அவசர குழுவினரும், காவல் துறையினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
உரிமையாளருக்கு எதிராக வழக்குப்பதிவு: தற்போது சிறுமி ஹெத்கேவார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார். இந்த விஷயம் தொடர்பாக நாயின் உரிமையாளருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.