MDMK Vaiko Meets MK Stalin (Photo Credit: YouTube)

ஆகஸ்ட் 01, ஆழ்வார்பேட்டை (Chenni News): மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகன் முக முத்து (MK Muthu Death) சமீபத்தில் காலமானார். இவரது மறைவு தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், ஒருநாள் முழுவதும் முதல்வர் உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தார். இதனால் முதல்வரின் உடல்நிலை மிகவும் மோசமானது. இதனையடுத்து, கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கும் மேல் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டார். தொடர்ந்து உடல்நலம் முன்னேறிய பின்னர், அலுவலக பணிகளை மருத்துவமனையில் இருந்து கண்காணித்து வந்தார். பின் நேற்று முன்தினம் வீட்டுக்கு திரும்பி இருந்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு:

இதனிடையே, மருத்துவமனைக்கு சென்று வீட்டுக்கு வந்த தமிழ்நாடு முதல்வரை தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் (DMDK Premalatha Vijayakanth Meets CM Stalin) நேரில் சென்று சந்தித்து பேசி இருந்தார். அதனைத்தொடர்ந்து, நேற்று அதிமுக கழகத் தொண்டர் மீட்பு அணியின் ஓ. பன்னீர்செல்வம் (O. Panneerselvam Meets CM Stalin) முதல்வரை சந்தித்து பேசி இருந்தார். இந்நிலையில், இன்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். LPG Cylinder Price in Tamilnadu: பிறந்தது ஆகஸ்ட் மாதம்.. சிலிண்டர் விலை குறித்து தித்திப்பு செய்தி.! 

தமிழ்நாடு அரசியல் மாற்றம்:

கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியலில் 2026 தேர்தலை கருத்தில் கொண்டு பல பரபரப்பு மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஜெயலலிதா குறித்து பாஜக கூட்டணியை ஆதரிக்கும் விதமாக பதிவு செய்த ஒரு சர்ச்சை கருத்து மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அணி வெளியேறுவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து ஓபிஎஸ் யாருடன் இணைவார்? என கேள்வி எழுந்துள்ளது. அதனை விவாதமாக்கும் வகையில் ஓ.பன்னீர் செல்வம் மு.க ஸ்டாலினுடன் 2 முறை சந்தித்துள்ளார். ஓ. பன்னீர் செல்வம் விஜயின் தவெகவுடன் கூட்டணியில் இணைவாரா? அல்லது திமுகவுடன் பயணத்தை தொடங்குகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அரசியல் பரபரப்பு சூழ்நிலையை அடுத்து, வைகோவும் முதல்வரை (MDMK Vaiko Meets CM Stalin) சந்தித்துள்ளது கவனம் பெற்றுள்ளது.

முதல்வருடன் சந்திப்பு ஏன்? வைகோ பேட்டி:

முதல்வரை சந்தித்தபின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, "முதல்வர் உடல்நலம் தேறி வந்துள்ளார். அவரிடம் நலம் விசாரித்தேன். அலுவல் பணிகளை மருத்துவமனையில் இருந்தபடி கவனித்து வந்ததாகவும் கூறினார். மகிழ்ச்சியுடன் பாராட்டினேன். நெல்லை கவின் மரணம் (Nellai Kavin Death Case) குறித்து கேட்டேன். சகோதரி கனிமொழி, அமைச்சர் சகாக்கள் நிகழ்விடத்தில் இருப்பதாக கூறினார். அங்கு கவினின் பெற்றோர் சம்மதம் தெரிவித்த பின்னரே சகோதரி திரும்புவார் என கூறினார். இவ்வகை குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினேன். கட்டாயம் எடுக்கப்படும் என உறுதியளித்தார்" என தெரிவித்தார்.