Bihar Murder Case (Photo Credit : @brinksreportcom X)

ஜூலை 08, பீகார் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள பூர்ணியா மாவட்டம் டகோமா கிராமத்தில் வசித்து வருபவர் பாபு லால். இவரது குடும்பத்தினர் சீதாதேவி, மன்ஜத் ஒரன், ராணியா தேவி, டபோ மோஸ்மட். இவர்களுடன் ஒரு கை குழந்தையும் இருக்கிறது. இவர்கள் அனைவரும் ஒரே கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்கள். குடும்பத்தினர் மாந்திரீக வேலையில் ஈடுபடுவதாக கிராமத்தை சார்ந்த மக்கள் நம்பி இருக்கின்றனர். இதனால் கிராமத்தில் நடந்து வந்த சிறுசிறு அசம்பாவிதங்களுக்கும் இவர்களின் மாந்திரீக சடங்குகளே காரணம் என ஒட்டுமொத்த கிராமமும் மூடநம்பிக்கையில் இருந்து வந்துள்ளது. நடுரோட்டில் காதலியை துடிதுடிக்க கொன்ற காதலன்.. நடத்தை சந்தேகத்தால் பயங்கரம்.! 

5 பேரை கொளுத்திய கிராம மக்கள் :

இந்நிலையில் நேற்று கிராமத்தினர் அனைவரும் ஒன்று திரண்டு பாபு லாலின் வீட்டிற்கு சென்ற நிலையில், அங்கு குடும்பத்தினர் ஐந்து பேரை கொடூரமாக தாக்கி கொலை செய்துள்ளனர். பின் ஐவரின் உடலையும் வீட்டுக்குள் போட்டு தீ வைத்துக் கொளுத்தினர். இந்த சம்பவத்தில் ஒரே ஒரு குழந்தை மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. இந்த விஷயம் குறித்து தகவலறிந்த காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் உள்ளூரை சார்ந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.