ஜனவரி 30, சூரத் (Gujarat News): குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத், லிம்பியாத் பகுதியைச் சேர்ந்த பெண்மணி தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவர் தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். பெண்மணி வேலைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வரும் வரை சிறுமி தனியாகவே வீட்டில் இருப்பார். வேலைக்கு செல்லும் நிறுவனத்தில் பெண்ணுடன் 15 வயது சிறுவனும் வேலை பார்க்கிறார். இவர்கள் அனைவரும் ஒரே பகுதியில் தங்கியிருப்பதாக தெரியவருகிறது.
தண்ணீர் வேண்டும் என கேட்டு துயரம்: இந்நிலையில், சம்பவத்தன்று 15 வயது சிறுவன் தன்னுடன் வேலை பார்த்து வரும் பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பெண்ணின் 13 வயது மகள் தனியாக இருந்த நிலையில், குடிக்க தண்ணீர் வேண்டும் என கேட்டுள்ளார். தாயுடன் பணியாற்றி வரும் நபர் என்பதால், சிறுமியும் எவ்வித சந்தேகமும் இன்றி அவரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். அப்போது, வீட்டின் கதவை தாழிட்ட 15 வயது சிறுவன், சிறுமியை பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளார். Earthquake Alert: லடாக்கில் இன்று காலை மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
மீண்டும் பலாத்கார முயற்சி: இந்த துயர சம்பவம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில், இது குறித்து வெளியே யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கிறார். இதனால் சிறுமி அச்சப்பட்டு தாயிடம் நடந்ததை கூறவில்லை. இந்நிலையில், கடந்த 27ஆம் தேதி மீண்டும் சிறுமியின் வீட்டிற்கு சென்ற கயவன், சிறுமியை பலாத்காரத்துக்கு உட்பட உட்படுத்த நினைத்து முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். இதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்த நிலையில், சூழ்நிலை சரிவர அமையாததால் அங்கிருந்து 15 வயது சிறுவன் புறப்பட்டு சென்றுள்ளார்.
போக்ஸோ சட்டத்தில் கைது: இதனால் வீட்டில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து, விழிபிதுங்கி காணப்பட்ட சிறுமி மாலை தாயார் வீட்டிற்கு வந்ததும் தனக்கு நடந்ததை கண்ணீருடன் விவரித்து இருக்கிறார். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்மணி, தனது மகளுடன் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கயவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.