ஜனவரி 30, லடாக் (Ladakh Earthquake): இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே மாநிலங்கள் அளவில் அவ்வப்போது லேசான நிலநடுக்கங்கள் உணரப்பட்டு வருகின்றன. நேற்று மற்றும் அதற்கு முன்தினம் கூட ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள சில நகரங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், லடாக்கில் உள்ள லே (Leh Earthquake) பகுதியில், இன்று காலை 05:39 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 புள்ளிகள் மதிப்பில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதங்கள் இல்லை எனினும், அடுத்தடுத்த சிறிய நிலநடுக்கங்கள் மிகப்பெரிய நிலநடுக்கத்திற்கு எச்சரிக்கையாகவும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. Lecturer Died in Accident: திடீரென குறுக்கே வந்த நபரால் கல்லூரி பேராசிரியருக்கு நடந்த சோகம்; சாலை விபத்தில் பரிதாப பலி.. பதறவைக்கும் காட்சிகள்.!
An earthquake with a magnitude of 3.4 on the Richter scale hit Leh, Ladakh today at 05:39 am: National Centre for Seismology pic.twitter.com/dTItx4zf9B
— ANI (@ANI) January 30, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)