நவம்பர் 24, பெங்களூர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பாகல்கோட் (Hair Dryer Blast) மாவட்டம், கூர்த்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் பசவ ராஜேஸ்வரி. இவர் மறைந்த ராணுவ வீரரின் மனைவி ஆவார். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகில் வசித்து வரும் தோழியான சசிகலா என்பவருக்கு, கொரியரில் பார்சல் ஒன்று வந்துள்ளது. சசிகலா அந்த சமயம் ஊரில் இல்லாத காரணத்தால், ராஜேஸ்வரி வசம் பார்சல் ஒப்படைக்கப்பட்டது. அதனை பிரித்துப் பார்த்து கூறுமாறு சசிகலா தோழியிடம் தெரிவித்துள்ளார்.
வெடித்துச் சிதறிய ஹேர் ட்ரையர்:
இதனையடுத்து, பார்சலை பிரித்துப் பார்த்த ராஜேஸ்வரிக்கு உள்ளே ஹேர் டிரையர் இருப்பது தெரியவந்த நிலையில், அதனை இயக்கி பார்க்க மின்சாரத்துடன் இணைத்த போது, ஹேர் ட்ரையர் வெடித்து சிதறியுள்ளது. இந்த சம்பவத்தில் இரண்டு கைகளும் துண்டிக்கப்பட்டு, அறை முழுவதும் ரத்தம் தெறிக்க ராஜேஸ்வரி அலறி இருக்கிறார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். Road Accident: கார் மோதி வயதான தம்பதி பரிதாப பலி.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ உள்ளே..!
அதிர்ச்சி தகவல் அம்பலம்:
தற்போது அவர் தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். இதனிடையே, ஹேர் டிரையர் வெடித்தது எப்படி? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, பசவ ராஜேஸ்வரியின் கள்ளக்காதலரான சிதப்பா ஷீலாவன்ட் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் கூறிய வாக்குமூலம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கள்ளக்காதல் உறவுக்கு தடை:
கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த ராஜேஸ்வரி, சிதப்பா ஷீலாவன்ட் பழகி வந்துள்ளார். இந்த விஷயம் ராஜேஸ்வரியின் தோழியான சசிகலாவுக்கு தெரியவந்து இருக்கிறது. இதனால் அவர் ராஜேஸ்வரியை கண்டித்து சிதப்பாவுடன் கொண்ட பழக்கத்தை கைவிடுமாறு கூறியுள்ளார். இதனை ஏற்று ராஜேஸ்வரி சரணப்பாவுடன் பழகுவதை குறைத்து கொண்ட நிலையில், தனது கள்ளக்காதல் உறவுக்கு சசிகலா தடையாக இருப்பதாக எண்ணி இருக்கிறார்.
சதிச்செயலை அரங்கேற்றி அதிர்ச்சி:
இதனால் சரணப்பா சசிகலாவை கொலை செய்ய முடிவு எடுத்துள்ளார். இதனையடுத்து, தான் பணியாற்றி வந்த கிரானைட் குவாரியிலிருந்து வெடிபொருட்களை திருடியவர், ஹேர் ட்ரையர் ஒன்றை வாங்கி அதில் மின் இணைப்பு கொடுத்தால் வெடிக்கும் வகையில் தயார் செய்து இருக்கிறார். இதனை சசிகலாவின் வீட்டு முகவரிக்கும் அனுப்பி வைத்த நிலையில், சம்பவத்தன்று அவர் வெளியூர் சென்று இருந்த காரணத்தால், அதனை ராஜேஸ்வரி ஹேர் டிரெயினை வாங்கி இயக்கிய போது சம்பவம் நடந்தது அம்பலமானது. இதனையடுத்து, சரளப்பாவை கைது செய்த காவல்துறையினர் தொடர் விசாரணை நடத்துகிறார்.