
ஜனவரி 24, பெங்களூர் (Bangalore News): கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் (Bangalore), ஞானபாரதி பகுதியில் வசித்து வருபவர் கேபி எச். மஞ்சுநாத் (வயது 39). இவரின் மனைவி நயனா ராஜ். இவர் ஒப்பனைக் கலைஞராக பணியாற்றி வருகிறார். தம்பதிகள் இருவருக்கும் கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடைபெற்று முடிந்தது. தற்போது பெங்களூரில் உள்ள வீட்டில், இவர்கள் குடும்பத்துடன் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு 9 வயதுடைய மகன் ஒருவர் இருக்கிறார்.
விவகாரத்து வழக்கை திரும்ப பெற கோரிக்கை:
கேபியின் பூர்வீகம் அங்குள்ள தும்மக்குர மாவட்டம், என்.ஜி.இ.எப் லே-அவுட் ஆகும். தம்பதிகள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2022ல் நயனா தனது கணவருடன் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்து இருக்கிறார். விவாகரத்து முடிவு காரணமாக, நயனா தனது கணவரை பிரிந்து தாய் வீட்டிற்கும் சென்றுள்ளார். மனைவி, குழந்தைகளை பிரிய மனமில்லாத கேபி மஞ்சுநாத், அவ்வப்போது மாமனார் - மாமியார் வீட்டிற்கு சென்று, விவாகரத்து வழக்கை திரும்ப பெறக்கூறி கோரிக்கை வைத்து வந்தார். தமிழக கபாடி வீராங்கனைகள் மீது பஞ்சாபில் தாக்குதல்; போட்டியில் வாக்குவாதம் முற்றி பயங்கரம்.!
உடல் கருகி பலி:
விவாகரத்து விஷயத்தில் உறுதியாக இருந்த நயனா தனது மறுப்பை கண்டிப்புடன் கூறி இருக்கிறார். இறுதியாக இன்று காலை சுமார் 08:30 மணியளவில் மஞ்சுநாத் நயனாவை நேரில் சந்தித்து விவாகரத்து தொடர்பாக முறையிட்டுள்ளார். நயனா மீண்டும் திட்டவட்டத்துடன் மறுப்பு தெரிவித்த காரணத்தால், மனமுடைந்துபோன மஞ்சுநாத் மனனவியின் வீட்டுக்கு முன்பு பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து, நிகழ்விடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், மஞ்சுநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள், விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சுநாத்தின் தாய் அளித்த புகாரின் பேரில், மஞ்சுநாத்தின் மனைவி, அவரின் குடும்பத்தினருக்கு எதிராக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
விவாகரத்து காரணமாக தொடரும் சோகம்:
முன்னதாக சில மாதங்களுக்கு முன் பெங்களூரை சேர்ந்த ஐடி ஊழியர், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் விவாகரத்து வழக்குகளில், மனைவியின் தொந்தரவு காரணமாக தற்கொலை செய்துகொண்டு இருந்தனர். இதனிடையே, மனைவி விவாகரத்து முடிவை கைவிடவில்லை என்று வருந்தி, கணவர் தற்கொலை செய்துகொண்ட சோகம் நடந்துள்ளது.