Maharashtra Father Killed Daughter Case (Photo Credit : @prajavani X/ Pixabay)

ஜூன் 30, மகாராஷ்டிரா (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லத்தூர் மாவட்டம் பீமா தண்டாவில் வசித்து வருபவர் பாலாஜி ரத்தோட். இவருக்கு திருமணமாகி வர்ஷா என்ற மனைவி இருக்கிறார். தம்பதிக்கு ஆருஷி என்ற 4 வயது மகளும் உள்ளார். திருமணத்திற்கு பின் தம்பதி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், பாலாஜி அவ்வப்போது மது அருந்தி வந்துள்ளார். இந்த பழக்கத்திற்கு நாளடைவில் அடிமையானவர் மனைவியுடன் தகராறும் செய்து வந்துள்ளார். இதனை மனைவி கண்டித்தும் பலனில்லாததால் கணவரை பிரிந்து தனது தந்தை வீட்டில் வீட்டிற்கு சென்றுள்ளார். மன அமைதிக்காக வளர்ப்பு நாயை வெட்டி பலி கொடுத்த இளம்பெண்.. பெங்களூரில் அதிர்ச்சி.! 

மகளை கழுத்தை நெரித்துக்கொன்ற தந்தை :

இந்த நிலையில் நேற்று மதியம் தம்பதியின் 4 வயது மகள் ஆருஷி தந்தையிடம் சாக்லேட் வாங்க பணம் கேட்டதாக தெரிய வருகிறது. மனைவி வீட்டை விட்டு சென்ற ஆத்திரத்தில் இருந்தவர் குழந்தை என்றும் பார்க்காமல் கடுமையாக தாக்கியதோடு, மனைவியின் சேலையால் மகளின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவத்தில் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளது.

மரண தண்டனை அளிக்க மனைவி கோரிக்கை :

இதனை தொடர்ந்து வர்ஷாவுக்கு மகள் இறந்தது குறித்து தெரியவரவே, கணவர் மீது காவல்நிலைத்தில் புகாரளித்து, தனது கணவருக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார். இந்த புகாரின் பேரில் பாலாஜி ரத்தோட் மீது கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.