ஜனவரி 24, மும்பை (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, நாசலேபுரா பகுதியில் வசித்து வரும் உத்திரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண், தனது மாமாவின் பராமரிப்பில் வசித்து வருகிறார். இவரின் மாமா-அத்தை சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்த பெண்மணி, அங்குள்ள வசாய் கடற்கரை பகுதிக்கு வந்துள்ளார். அப்போது, அவரிடம் நட்பாக பேசிய ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், பெண்ணை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சேலம்: அன்னை தெரசா பெயரில் அதிக வட்டி முதலீடு மோசடி? காவலர்கள் மீது தாக்குதல்.. சேலத்தில் பரபரப்பு.!
பெண் பலாத்காரம்:
மறுநாள் காலையில் பெண்மணி மும்பையில் உள்ள பகுதியில், ராமர் கோவில் வளாகத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார். அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதி செய்த காவல்துறையினர், பெண்ணிடம் விசாரணை நடத்தி இருக்கின்றனர். விசாரணையில், பெண் தன்னை ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அதிர்ச்சி வாக்குமூலம் அளித்து இருக்கிறார்.
அந்தரங்க உறுப்பில் கடுமையான காயம்:
மேலும் பெண்ணின் அந்தரங்க உறுப்பு கத்தியால் கிழிக்கப்பட்டு, கற்கள் திணிக்கப்பட்டு இருந்துள்ளது. இதனால் அவர் கொடூரமான முறையில் பாலியல் சித்ரவதைக்கு உள்ளாகி இருக்க வேண்டும் என எண்ணிய அதிகாரிகள், பெண்ணின் வாக்குமூலத்தின் பேரில் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இதனிடையே, பெண்மணி பலாத்காரம் தொடர்பாக வீட்டில் தகவல் தெரிவிக்க அஞ்சி, பதற்றத்தில் என்ன செய்வது என தெரியாமல் கத்தியை வாங்கி அந்தரங்க உறுப்பை தாக்கிக்கொண்டதாகவும், கற்களை திணித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் உண்மையில் என்ன நடந்தது? என அதிகாரிகள் தீவிர விசாரணையை முன்னெடுத்து இருக்கின்றனர்.