மே 09, நாக்பூர் (Maharashtra News): பள்ளிகளுக்கு பெற்றோர் குழந்தைகளை தனிப்பட்ட வாகனங்களில் அனுப்பி வைக்கும்போது, அந்த ஓட்டுனர்களின் செயல்பாடுகள் குறித்து குழந்தைகளிடம் பயணத்தின்போது நடக்கும் விஷயத்தை விசாரித்து சுதாரிப்புடன் பெற்றோர் செயல்பட வேண்டும் என்பதை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.

15 வயது பள்ளி மாணவி: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர், அஜினி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 15 வயதுடைய மகள் இருக்கிறார். சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு பயின்று வருகிறார். தினமும் சிறுமி (School Girl Molests by Auto Driver in Nagpur) பள்ளிக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக சிறுமியை ஒரே ஆட்டோ ஓட்டுநர் பள்ளிக்கு அழைத்துச்சென்று, பின் மீண்டும் வீட்டிற்கு அழைத்துவந்து விட்டுள்ளார். PM's Economic Advisory Council Report: இந்தியாவில் இந்து மக்கள்தொகையில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு அறிக்கை வெளியீடு..!

நடுவழியில் பாலியல் தொல்லை: இந்நிலையில், சம்பவத்தன்று சிறுமியை வீட்டிற்கு அழைத்துவந்துகொண்டு இருந்த ஆட்டோ ஓட்டுநர், ஒதுக்குபுறமான இடத்திற்கு சிறுமியை அழைத்துச்சென்று ஆட்டோவில் வைத்து பாலியல் ரீதியாக அத்துமீற முயன்று சிறுமியின் அந்தரங்க பகுதிகளை தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் பயந்துபோன சிறுமியை சமாளிக்க முயன்றும் பலனில்லை. இறுதியில் சர்ச்சைக்குரிய ஆட்டோ ஓட்டுநர் ஆட்டோவை அங்கிருந்து இயக்கிச்சென்றார்.

வைரலான வீடியோ: இதனிடையே, ஆட்டோ ஓட்டுனரின் அதிர்ச்சிதரும் செயல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. ஆட்டோவுக்குப்பின் சென்றுகொண்டு இருந்த வேறொரு தம்பதி, சிறுமியை ஆட்டோ ஓட்டுநர் மறைவான பகுதிக்கு அழைத்து செல்வதை கண்டு தூரத்தில் இருந்து நடப்பதை கவனித்துள்ளனர். பின் கயவனின் செயலை மறைந்திருந்து வீடியோ எடுத்து காவல்துறைக்கு தந்துள்ளனர். வீடியோ பொதுவெளியிலும் வெளியாகி வைரலாகின. TN Rain Prediction: தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.. வானிலை ஆய்வாளர் தகவல்..!

போக்ஸோ சட்டத்தில் ஆட்டோ ஓட்டுநர் கைது: பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தனக்கு நடந்ததை கூறி கதறிய நிலையில், கிடைக்கப்பெற்ற வீடியோ ஆதாரம் மற்றும் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 25 வயதாகும் ஆட்டோ ஓட்டுனரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது.