
ஜூன் 22, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, பிவெவாடி பகுதியில் 85 வயதுடைய முதியவர் தனியாக வசித்து வருகிறார். இவர் துணையை இழந்து தனிமையில் வாடி வந்ததால், தனக்கு திருமணம் செய்ய வரன் தேடி இருக்கிறார். இதற்காக பேப்பர், சமூக வலைத்தளங்களில் விளம்பரமும் செய்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த பெண் ஒருவர் முதியவரை தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். Nainar Nagendran: வேறு மொழியை படிக்கச் சொல்வது ஏன்? - முருக மாநாட்டில் மொழி அரசியல் பேசிய நயினார்..!
திருமணம் மோசடி (Marriage Scam Alert):
பெண்ணின் வார்த்தைகளில் விழுந்த முதியவர், பெண் கேட்கும்போதெல்லாம் சிறுகச்சிறுக என மொத்தமாக ரூ.11.45 இலட்சம் பணம் கொடுத்துள்ளார். ஒருகட்டத்தில் தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த முதியவர், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தற்போது, இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் திருமண மோசடியில் ஈடுபட்ட நபருக்கு வலைவீசி இருக்கின்றனர். இந்த விஷயம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.