Nainar Nagendran (Photo Credit: YouTube)

ஜூன் 22, மதுரை (Madurai News Today): மதுரை மாவட்டம் முனி சாலை பகுதியில், இன்று இந்து முன்னணி அமைப்பு சார்பில் முருக பக்தர்கள் மாநாடு (Murugan Pakthar Manadu) நடத்தப்படுகிறது. ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் சிறப்பு விருந்தினராக, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை, தமிழிசை சவுந்தர்ராஜன், அமர்பிரசாத் ரெட்டி மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் கலந்துகொண்ட மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. அரசியல் பேச்சுக்கள் கூடாது என்ற நீதிமன்றத்தின் நிபந்தனையுடன் நடத்தப்பட்ட மாநாட்டில், முருக பக்தர்களும், இறைவழிபாடு ஆர்வம் கொண்டவர்களும் நேரில் கலந்துகொண்டனர். சுமார் 5 இலட்சம் மக்கள் ஒன்றாக திரண்டு கந்தசஷ்டி கவசம் பாடி சாதனையும் படைக்கின்றனர். College Student Suicide: காதல் தோல்வியால் விபரீதம்.. கல்லூரி மாணவர் தற்கொலை.!

நயினார் நாகேந்திரன் பேச்சு:

தொடர்ந்து, மாநாட்டில் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், "முருக பக்தர்கள் மாநாடு நடக்கக்கூடாது என பல தடைகளை ஏற்படுத்த முயற்சித்தனர். அதனைத்தையும் படிக்கல்லாக மாற்றி மாநாடு நடத்தப்படுகிறது. உங்களை எதாவது ஒரு மொழியை படிக்கச்சொல்கிறோம். தெலுங்கு, தமிழ் ஒரே கலாச்சாரம், பண்பாடு. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஒரே பண்பாடுகளை கொண்டது. அதனால் தான் ஏதேனும் ஒரு கூடுதல் மொழியை படிக்க சொல்கிறோம்" என பேசினார்.