ஜூலை 01, புனே (Maharashtra News): மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள புனே மாவட்டம், லோனவாலா பகுதியில் பூசி அணை (Bhushi Dam Overflowed) உள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கி இருப்பதால், மகாராஷ்டிரா மாநிலம் நல்ல மழைப்பொழிவை சந்தித்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்களில் உள்ள வீதிகள், திடீர் வெள்ளம் தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்கிறது. அந்த வகையில், வார இறுதி விடுமுறை நாளான நேற்று, உள்ளூரில் இருக்கும் சையத் நகர் (in Pune 5 Drowned into Bhushi Dam Overflowed Flood) பகுதியை சேர்ந்த குடும்பத்தினர் பலரும் அங்குள்ள பூசி அணைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்குள்ள அருவியில் குளித்து மகிழ்ந்துள்ளனர். இதனிடையே, தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் மடமடவென உயர்ந்து, திடீரென அணைகளில் இருந்து காட்டாற்று வெள்ளம் போல நீர் வெளியேறி இருக்கிறது. TN Weather Update: அடுத்த 3 மணிநேரத்திற்கு சென்னை, நீலகிரி உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் அறிவிப்பு.!
ஐவரின் உடல் மீட்பு, குடும்பத்தினர் சோகம்:
அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சென்ற சிறிதளவு நீரில் மக்கள் குளித்துக்கொண்டு இருக்க, திடீரென ஆட்பறித்த வெள்ளம் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 க்கும் மேற்பட்டோரை சூழ்ந்துகொண்டுள்ளது. பிறர் அனைவரும் கரையில் இருந்த நிலையில், நீருக்குள் இருந்த 4 சிறார்கள் சிக்கிக்கொண்டனர். நேற்று மதியம் 12:30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒருசில வினாடிகளில் இவர்கள் அனைவரும் நீருடன் அடித்து செல்லப்பட்ட நிலையில், ஐவரின் சடலம் காவல் துறையினரால் மீட்கப்பட்டுள்ளது. சுமார் 6 கி.மீ வரை நடந்த தேடுதல் வேட்டையில் முதற்கட்டமாக இருவரின் உடலும், அடுத்தடுத்து என 3 பேரின் உடல் மீட்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தில் 40 வயதுடைய பெண்மணி, 13 வயதுஉடைய சிறுமி, இரண்டு 6 வயதுடைய குழந்தைகள், 4 வயதுடைய சிறுவன் என ஐவர் பரிதாபமாக உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் இவ்வாறான அணை மற்றும் அருவிகள், அதன் வழிகளில் குளிப்பது, கரையோரத்தில் நின்று அதன் அழகை ரசிப்பது போன்ற செயல்களை தவிர்க்க வேண்டும் என காவல் துறையினர் கோரிக்கை வைக்கின்றனர்.
#लोणावळा भूशी धरणात एकाच कुटुंबातील पाच जण बुडाले...५ पैकी २ जणांचे मृतदेह बाहेर काढले...पर्यटन स्थळी गेल्यानंतर जिवाशी खेळ कशासाठी ? @puneruralpolice pic.twitter.com/dI0LuWtzy7
— Archana More-Patil (@Archana_Scoope) June 30, 2024