Jajpur Accident (Photo Credit: @kanak_news X)

ஏப்ரல் 16, ஜாஜபூர் (Odisha News): மேற்குவங்க மாநிலத்தில் உள்ள டிகாஹ் நகரில் இருந்து, ஒடிசா மாநிலத்தில் உள்ள கட்டக் நகருக்கு தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று நேற்று இரவு பயணம் செய்தது. இந்த பேருந்தில் 50 க்கும் அதிகமான பயணிகள் இருந்தனர். பேருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 16ல், ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜபூர் (Jajpur Bus Accident) மாவட்டம், பிராப்தி பகுதியில் வந்துகொண்டு இருந்தது. அங்குள்ள பாலத்தின் மீது பேருந்து பயணித்தபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் (Bus Fall off from Bridge) தடுப்புகளை உடைத்துக்கொண்டு பக்கவாட்டு அணுகு சாலையில் விழுந்து விபத்திற்குள்ளானது. Siren OTT Release: திரையரங்கில் கீர்த்தி சுரேஷ் வில்லத்தனத்தில், ஜெயம் ரவி அசத்தல் நடிப்பில் வெளியான சைரன்… இப்போது ஓடிடியில்..! 

5 பேர் பலி, 38 பேர் படுகாயம்: இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 5 பேர் நிகழ்விடத்திலேயே பலியாகினர். 38 க்கும் அதிகமான பயணிகள் படுகாயத்துடன் தங்களை காப்பாற்றக்கூறி அலறி இருக்கின்றனர். விபத்து சத்தம் கேட்டு வந்த உள்ளூர் மக்கள், காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் மற்றும் மீட்பு படையினர், துரிதமாக செயல்பட்டு விபத்தில் காயமடைந்தோரை மீட்டு கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவமனை மற்றும் ஜாஜபூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

Jajpur Bus Accident (Photo Credit: @mehta_asish X)

மதுபோதை ஓட்டுனரால் சோகம்: அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையின்படி, தனியார் சொகுசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனாலேயே வாகனம் பாலத்தில் திடீரென விபத்தில் சிக்கி இருக்கிறது என்பது உறுதியானது. பேருந்து விபத்திற்குள்ளானதில் ஓட்டுனரும் காயமடைந்து இருப்பதால், சிகிச்சைக்கு பின்னர் அவரிடம் விசாரணை மேற்கொள்ள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். விபத்து குறித்து தகவல் அறிந்து தனது இரங்கலை பதிவு செய்த ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக், விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.3 இலட்சம் நிவாரண நிதி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.