Odisha Train Derailed (Photo Credit: @ArgusNews_in X)

மார்ச் 30, கட்டாக் (Odisha News): ஒடிஷா மாநிலத்தில் உள்ள கட்டாக் மாவட்டத்தில், பெங்களூர் - காமாக்யா எக்ஸ்பிரஸ் இரயில் வந்துகொண்டு இருந்தது. இந்த இரயில் கட்டாக் மாவட்ட பகுதியில் வந்தபோது, திடீரென இரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 11 பெட்டிகள் தடம்புரண்டுள்ளது. இதனால் பயணிகள் யாருக்கும் எவ்வித காமும் ஏற்படவில்லை. நல்வாய்ப்பாக அனைவரும் உயிர்தப்பினர். 1 முதல் 5ம் வகுப்பு வரை.. முன்கூட்டியே தேர்வு: கோடை விடுமுறை நீட்டிப்பு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.! 

இரயில் தடம்புரண்டு விபத்து:

இரயில் தடம்புரண்டது குறித்து தகவல் அறிந்த இரயில்வே மற்றும் மீட்புப்படை அதிகாரிகள், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முற்றிலும் ஏசி பொருத்தப்பட்ட இரயில், இன்று தடம்புரண்டுள்ளது. இரயிலின் வேகம் குறைவாக இருந்தது காரணமாக, பெரும் அசம்பாவிதமும் தவிர்க்கப்ட்டுள்ளது.

இரயில் தடம்புரண்ட விஷயம் குறித்து விவரிக்கும் பயணி: