மார்ச் 30, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப்பள்ளிகளில், தேர்வு தேதிகள் முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தன. கோடை வெயிலின் தாக்கம் என்பது முந்தைய ஆண்டுகளை விட அதிகம் இருக்கிறது. இதனால் 1 முதல் 5ம் வகுப்பு வரையில் பயிலும் மாணவர்களுக்கான தேர்வு தேதிகள் மாற்றம் செய்யப்பட வேண்டும், முன்கூட்டியே தேர்வு நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக ஆலோசனை செய்து முடிவுகள் எடுக்கப்படும் என மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருந்தார். சிஎஸ்கே தோல்வி கிண்டல்.. இளைஞர் கொல்லப்பட்ட விவகாரத்தில் திடுக் திருப்பம்.. ஷாக் வாக்குமூலம்.!

முழு ஆண்டு தேர்வு தேதிகள் மாற்றம் (TN School Exam Date 2025 for 1 to 5th Standard):
இந்நிலையில், 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, முழு ஆண்டு தேர்வுகள் ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை, 10 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கம் காரணமாக, கோடை விடுமுறை காலமும் 2025ம் ஆண்டில் நீடிப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக தேர்வுகள் ஏப்ரல் 9ல் தொடங்கி 21 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பாடவாரியாக தேர்வு தேதிகள்:
07.04.2025 - தமிழ்
08.04.2025 - விருப்ப மொழி
09.04.2025 - ஆங்கிலம்
11.04.2025 - கணிதம்
15.04.2025 - அறிவியல்
17.04.2025 - சமூக அறிவியல்