Rajasthan River Death (Photo Credit : @OpIndia_in X)

ஜூன் 10, ஜெய்ப்பூர் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த 10 பேர்கொண்ட இளைஞர்கள் குழு, சம்பவத்தன்று அங்குள்ள டோன்க் மாவட்டத்தின் பானாஸ் ஆற்றங்கரைக்கு சென்றுஉள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பாக இவர்கள் பயணித்ததாக கூறப்படுகிறது. இவர்களின் வயது 25 முதல் 30 க்குள் இருக்கும் இளைஞர்கள் ஆவார்கள். Israel Gaza War: உணவுக்காக ஏங்கிய மக்கள் மீது துப்பாக்கிசூடு.. 25 பேரை கொன்ற ராணுவம்.. 70 பேர் படுகாயம்.! 

நீரில் இழுத்து செல்லப்பட்டனர்:

இந்நிலையில், இவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கி உற்சாகமாக குளித்துக்கொண்டு இருந்தபோது, ஆழமான பகுதிக்கு சென்று சிக்கியதாக தெரியவருகிறது. இதனால் ஒருவர்பின் ஒருவராக நீரின் சுழற்சியில் சிக்கிக்கொண்டனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு வந்த உள்ளூர் மக்கள், இளைஞர்களை மீட்க முயற்சித்தும் பலனில்லை.

இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், தீயனை படையினர் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5 இளைஞர்களின் உடல் தேடப்படுகிறது.

மருத்துவமனை வாசலில் குவிந்த மக்கள் :