Visual From Video (Photo Credit : CNNnews18 X)

மே 16, ஜெய்பூர் (Rajasthan News): உயிரிழந்த பெற்றோரின் சொத்துக்களை பிரிப்பதில் மகன், மகள்கள் இடையே ஏற்படும் பிரச்சனை உலகளவில் பொது பிரச்சனையாக இருந்து வருகிறது. பாரம்பரிய சொத்துக்களை கேட்டு நடக்கும் சண்டைகளில் இந்தியாவில் நடக்கும் கொடுமைகள் ஏராளம் என்றும் கூறலாம். அதே நேரத்தில், இவ்வாறான சொத்துக்கள் பிரச்சனை பல்வேறு விதமாக தொடருகின்றன. Viral Video: குத்தாட்டம் போட்ட உறவினர்கள்.. மேடையில் சீறிப் பாய்ந்த காளை மாடு.., வைரலாகும் வீடியோ உள்ளே..! 

இதெல்லாம் மகனின் செயலா?

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோட்புட்லி மாவட்டத்தில் வசித்து வந்தவர் புவ்ரா தேவி. இவர் சமீபத்தில் காலமானார். இவரின் மறைவுக்கு பின்னர் தேவியின் உடல் இன்று குடும்பத்தினர் & உறவினர்களால் நல்லடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தேவியின் மகன் தாயின் வெள்ளி வளையலை தனக்கு கொடுக்க வேண்டும் என பிரச்சனை செய்தார். பின் உறவினர்கள் தலையிட்டு வெள்ளி வளையலை ஒப்படைத்த பின்னர் தாயின் உடலை எரியூட்ட அனுமதித்தார். இதுகுறித்த காட்சிகள் வெளியாகி பெண்ணின் மகனுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது.

தாயை எரிக்க வைக்கப்பட்ட மரக்கட்டையை படுத்து ஆர்ப்பாட்டம் செய்த மகன்: