ஏப்ரல் 15, சென்னை (Chennai): தென்னிந்திய பகுதிகளில் மேல் வளிமண்டல கீழடுகளில் காற்றின் திசை மாறுபாடு பகுதி நிலவுவதால், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டின் பரவலான இடங்களில் மழைக்கான முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 15ம் தேதியான இன்று காலை 10 மணிவரையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Papua New Guinea Earthquake: பப்புவா நியூ கினியா தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்.!
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) April 15, 2024
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)