பிப்ரவரி 23, ஹைதராபாத் (Hyderabad News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தில், பட்டப்பகலில் 25 வயதுடைய இளைஞர் ஒருவர் தனது தந்தையை கத்தியால் 15 முறை குத்திப் படுகொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. இதன் அதிர்ச்சிதரும் சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன. சனிக்கிழமையான நேற்று, மேட்ச்சல் - மல்கஞ்கிரி பகுதியில் இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.

நடுரோட்டில் அதிர்ச்சி கொலை:

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத், குஷைகுடா, மேட்ச்சல் - மல்கஞ்கிரி பகுதியில், நேற்று (பிப்.21) 25 வயதுடைய இளைஞர் ஒருவர், தனது தந்தையை சரமாரியாக கத்தியால் குத்திக்கொலை செய்தார். நடுரோட்டில், பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், இசிஐஎல் பேருந்து நிலையம் பகுதியில் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வானிலை: அடுத்த 2 நாட்களுக்கு வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.! 

சொத்து பிரச்சனையில் பயங்கரம்:

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் செகந்திராபாத், லால்பேட்டா பகுதியில் வசித்து வரும் அரெல்லி மோகிளி (வயது 45) என்பதும், அவரை கொலை செய்தது மகன் சாய்குமார் (வயது 25) என்பது தெரியவந்தது. எர்த் மூவர்ஸ் கம்பெனி நடத்தி வரும் மோகிளி, சொத்து விஷயத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுபோதைக்கு அடிமையான மோகிளி, எப்போதும் போதையில் வீட்டில் தகராறு செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தந்தை - மகனுக்கு சொத்து பிரச்சனையும் இருந்து வந்துள்ளது.

15 இடங்களில் சரமாரியாக குத்திக்கொலை:

சம்பவத்தன்று தந்தையின் செயல்பாடுகள் மற்றும் சொத்து விஷயத்தில் உச்சகட்ட ஆத்திரத்திற்குச் சென்ற சாய்குமார், தந்தையை பின்தொடர்ந்து சென்று 15 க்கும் மேற்பட்ட முறை நடுரோட்டில் கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. காவல்துறையினர் நிகழ்விடத்திற்கு விரைந்து மோகிளியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாய்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது.

பட்டப்பகலில் தந்தை கொலை செய்யப்படும் காணொளி: