ஜூன் 30, ஸ்ரீசைலம் (Andhra Pradesh News): ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவில் மிகப்பிரபலமானது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பல லட்சக்கணக்கான மக்களும் திரளுவார்கள். கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு லட்டு போன்ற பிரசாதங்களும் வழங்கப்படுகிறது. இதனிடையே சம்பவத்தன்று கோவிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் லட்டு பிரசாதம் வாங்கியபோது அதில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டுள்ளார். இது தொடர்பாக உடனடியாக அவர் எழுத்துப்பூர்வமாக தேவஸ்தான அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார் இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேவஸ்தானம் சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்டது.

பிரசாதத்தில் இருந்த கரப்பான்பூச்சி குறித்த புகைப்படம் :

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)