Fried Noodles | Crime Murder File Pic (Photo Credit: Wikipedia Pixabay)

மார்ச் 19, ஆக்ரா (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஆக்ரா (Agra) மாவட்டம், கண்டொலி நந்தல்பூர் பகுதியில் வசித்து வருபவர் சந்தீப். இவரின் மனைவி குஞ்சன். தம்பதிகள் இருவருக்கும் திருமணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். திருமணமான தொடக்கத்தில் இருந்து கடந்த சில ஆண்டுகள் வரை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த தம்பதி, சமீபத்தில் கருத்து வேறுபாடுகளை எதிர்கொண்டுள்ளது. இதனால் அவ்வப்போது இருவரும் தற்காலிகமாக பிரிந்து, பின் மீண்டும் சேர்ந்து வாழ்வது வாடிக்கை என கூறப்படுகிறது. Reels Addiction: முத்திப்போன ரீல்ஸ் மோகம்; ரத்தம் தெறிக்க.. நடுரோட்டில் ரீல்ஸ் வீடியோ..!

20 நிமிடங்கள் போராடி பறிபோன உயிர்:

இதனிடையே, சமீபத்தில் தம்பதி இருவரும் தங்களின் வீட்டில் இருந்தனர். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு உணவு சமைக்க தாமதமானதாக கூறப்படுகிறது. ஒருவித ஆவேசத்துடன் வெளியே சென்ற சந்தீப், மனைவிக்காக நூடுல்ஸ் சாப்பிட வாங்கி வந்துள்ளார். தன்னை சாப்பிட மறுத்து மனைவி குஞ்சன் கணவருடன் தகராறு செய்துள்ளார். மனைவி தொடர்ந்து மறுத்ததால் ஒருகட்டத்தில் ஆவேசத்தின் உச்சத்திற்குச் சென்ற சந்தீப், மனைவியை சரமாரியாக தாக்கி இருக்கிறார். சுமார் 20 நிமிடங்கள் வரை கழுத்தை பிடித்து, பின் விட்டு என மீண்டும்-மீண்டும் நெரித்துக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

காவல் நிலையத்தில் கணவர் சரண்:

ஒருகட்டத்தில் மனைவியை அங்கேயே விட்டுவிட்டு வீட்டில் இருந்து வெளியேறினார். வெளியே சென்ற குழந்தைகள் வீட்டுக்கு வந்தபோது தாய் அசைவற்று இருந்துள்ளார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, அவரின் மரணம் உறுதி செய்யப்பட்டது. மனைவியின் இறப்பு தொடர்பான தகவலை அறிந்த சந்தீப், நேரடியாக காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர், மருத்துவமனைக்கு சென்று குஞ்சனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.