
ஜூன் 16, பாக்பட் (Uttarpradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாக்பட் மாவட்டத்தில் புத்பூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 15 நாட்களுக்குள் 13 பேர் அடுத்தடுத்து மர்மமான வகையில் உயிரிழந்துள்ளனர். இதனிடையே வடிகாலில் இருந்து வெளியேற்றம் செய்யப்படும் நச்சுக்கழிவு (Toxic Waste Dead) காரணமாக நிலத்தடி நீர் மாசுபட்டுள்ளதாகவும், இதுவே மரணத்திற்கு காரணம் என்றும் உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். வழுக்கை தலையில் முடி வளரும்.. மக்களுக்கு ஒரிஜினல் மொட்டை போட்ட கும்பல்.!
நிலத்தடி நீரை மாசுபடுத்தும் கழிவு நீர்?
உயிரிழந்தவர்களில் அனைவருக்கும் சிறுநீரக கோளாறு, மாரடைப்பு, நோய் தொற்று பிரச்சனை என ஏதோ ஒரு உடல்நல கோளாறு இருந்துள்ளது. அங்குள்ள சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவு மற்றும் சுத்திகரிப்பு செய்யப்படாத கழிவு நீர், நிலத்தடி நீரை மாசப்படுத்திவிட்டதாகவும் (Uttarpradesh Water Pollution) உள்ளூர் மக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.
அடுத்தடுத்து மரணங்கள் :
இதனால் குடிநீரும் அசுத்தமாகி (Water Pollution Death) கால்நடைகள் பயிர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் 9 மரணங்கள் தற்போது வரை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், நீண்ட கால நோயாளிகள், அவர்களின் நோய் தன்மை காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் உள்ளூர் மக்கள் சுகாதார துறையின் கூற்றுகளை ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து இருக்கின்றனர்.