
ஜூன் 16, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பழைய நகரில் ஒரு கும்பல் துண்டு பிரசுரம், சமூக வலைதளம் மூலமாக விளம்பரம் ஒன்றை மேற்கொண்டது. அந்த விளம்பரத்தில் அங்குள்ள மைதானம் ஒன்றில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் வழுக்கை தலையில் (Bald Head Treatment)முடி வளர சிகிச்சை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழுவதுமாக மொட்டை அடித்து வருவோருக்கு இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. Air India Flight Crash: விமான விபத்து.. முன்னாள் மனைவிக்காக வருத்தப்பட்ட நடிகர்.!
6000 பேரை ஏமாற்றிய கும்பல் :
டெல்லியைச் சார்ந்த சல்மான் வாலா என்பவரின் குழுவினர் நேற்று அந்த மைதானத்துக்கு வந்துள்ளனர். அவர்களின் விளம்பரத்தை கண்ட ஆண்கள், பெண்கள் என 6000 பேர் குவிந்துள்ளனர். இவர்களுக்கு தனித்தனியாக கவுண்டர் அமைக்கப்பட்டு பணமும் வசூலிக்கப்பட்டது. முன்பதிவு கட்டணமாக ரூ.700 மற்றும் எண்ணெய் கட்டணமாக ரூ.600 என வசூலிக்கப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு வந்த அனைவரின் தலையிலும் எண்ணெய் தேய்க்கப்பட்டுள்ளது. இந்த எண்ணெயை 15 நாட்களுக்கு ஒரு முறை மூன்று மாதங்களுக்கு தடவி வந்தால் அடர்த்தியாக முடி வளரும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
விளம்பரம் செய்து மோசடி :
இதனை நம்பிய பலரும் தலையில் (Bald Head Forgery) அவர்கள் கொடுத்த எண்ணையை தடவி உள்ளனர். பின் இவர்கள் கும்பல் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக உப்பலில் இதே போன்ற விளம்பரம் செய்து பொதுமக்களிடம் பணம் பறித்த நிலையில், தற்போது சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் நடந்துள்ள இந்த குற்றம் குறித்து அதிகாரிகள் விசாரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.