Arun & Tanu Couple | Visual From Spot (Photo Credit: @gharkekalesh X)

ஜூன் 21, உத்திரப்பிரதேசம் (Uttar Pradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரோசாபாத் மாவட்டம் சிகோஹாபாத் பகுதியில் வசித்து வருபவர் தன்னு குமார். அங்குள்ள ரோஷன் நகர் பகுதியில் வசித்து வருபவர் அருண் சிங். இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. திருமணத்தை தொடர்ந்து தம்பதிகள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

பெண் மாயம்:

இதனிடையே கடந்த இரண்டு மாதங்களாக மகளிடம் இருந்து எந்த அழைப்பும் இல்லாததால், தன்னு குமாரின் தந்தை ஹக்கிம் தனது மருமகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது உங்களின் மகளை கடந்த இரண்டு மாதங்களாக காணவில்லை என அலட்சியத்துடன் அருண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. கள்ளக்காதல் ஆசை.. மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவர்.. அதிர்ச்சி சம்பவம்.! 

வரதட்சணை கொடுமை (Dowry Torture):

இதனால் சந்தேகமடைந்த ஹக்கிம் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் நடந்த விசாரணையில் அதிர்ச்சி சம்பவமானது அம்பலமாகியுள்ளது. அதாவது அருள்சிங்கின் குடும்பத்தினர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னதாக தொடர் வரதட்சணை கொடுமை செய்து மனைவியை உயிருடன் எரித்து கொலை செய்துள்ளனர்.

பெண் எரித்துக்கொலை:

இந்த சம்பவத்தை மறைத்த நிலையில், தற்போது இந்த விஷயம் அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அருண் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் பூப் சிங், சோனியா, காஜல் ஆகியோரின் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். தன்னு குமாரை கொலை செய்தவர்கள் சுமார் பத்து அடி அளவில் பள்ளம் தோண்டி உடலை புதைத்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.