
ஜூன் 20, லக்னோ (Uttarpradesh News): உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோ, தியோரியா கிராமத்தில் வசித்து வருபவர் கில்வான். இவர் விவசாயியாக பணியாற்றி வருகிறார். ஹரியானா மாநிலத்தில் உள்ள ஷாகாபாத் பகுதியில் வசித்து வந்த பெண்ணுடன் இவருக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது. தம்பதிகள் இருவருக்கும் இரண்டு மகன்கள் இருக்கின்றனர். திருமணமான தொடக்கத்தில் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்த இல்லற வாழ்க்கை ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுத்தியிருக்கிறது.
கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம் :
இந்த கருத்து வேறுபாட்டால் விவசாயியின் மனைவி அதே பகுதியில் வசித்து வரும் இளைஞர் ஒருவருடன் காதல் வயப்பட்டுள்ளார். இந்த கள்ளக்காதல் பழக்கத்தின் காரணமாக இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாகவும் இருந்து வந்துள்ளனர். இந்த விஷயம் கில்வானுக்கு தெரிய வரவே அவர் தனது மனைவியை கண்டித்து இருக்கிறார். ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத கள்ளக்காதல் ஜோடி தொடர்ந்து தனிமையில் சந்தித்து வந்துள்ளது. Israel Gaza War: பசிக்குது.. கதறும் குழந்தைகள்.. மண்ணை அள்ளி தின்ற சிறுவன்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ.!
மனைவியின் மூக்கை கடித்த கணவர் :
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்திலும் தனது கள்ளக்காதலரை சந்திக்க பெண் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் மனைவியை பின் தொடர்ந்து சென்ற கணவர் மனைவியின் செயல்பாடுகளை நேரில் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்றவர் கள்ளக்காதலரின் வீட்டுக்கு முன்பு இருந்த மனைவிடம் வாக்குவாதம் செய்து மனைவியை தாக்கி இருக்கிறார். ஒரு கட்டத்தில் அவரது மூக்கையும் கடித்து துப்பி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
போலீசார் விசாரணை :
மூக்கில் ரத்தம் வடிய பரிதவித்த பெண்மணி அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இந்த விஷயம் தொடர்பாக பெண் அளித்த புகார் பேரில் காவல்துறையினர் பெண்ணின் கணவரை கைது செய்துள்ளனர்.