Sexual Harassment File Pic (Photo Credit: Pixabay)

ஜூன் 24, மீரட் (Uttar Pradesh News): சமீபகாலமாகவே இந்தியாவில் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் விரக்தியடைந்த மக்கள் பலரும் சட்டங்கள் கடுமையானால் மட்டுமே இவ்வாறான விஷயங்களிலிருந்து இந்தியாவை காப்பாற்ற இயலும் என சமூகவலைத்தளத்தில் கூறி வருகின்றனர். தற்போது அதற்கு ஏற்றார் போல உத்திரபிரதேசத்தில் மற்றொரு கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற சிறுமி:

உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மீரட், லாலா லஜபதிராய் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த 20ஆம் தேதி 15 வயது சிறுமி அனுமதிக்கப்பட்டார். காலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்ட சிறுமியை கவனித்துக் கொள்ள அவரது தாயார் மட்டும் இருந்த நிலையில், அதே வார்டில் உத்தரகாண்டை சேர்ந்த மோகித் என்பவரும் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோகித்தை கவனித்துக் கொள்ள அவரது சகோதரர் ரோஹித் (வயது 20) இருந்துள்ளார். Marriage Scam: தனிமையை மறக்க திருமணம் ஆசை.. 85 வயது முதியவருக்கு நேர்ந்த சோகம்.! 

சிறுமியிடம் அத்துமீறிய கயவன் :

இந்த நிலையில் கடந்த 20ஆம் தேதி இரவு கழிவறைக்கு சென்ற சிறுமியிடம் ரோஹித் அத்துமீற முயற்சித்துள்ளார். அவரின் செயலுக்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்து கதறவே கொலை செய்து விடுவதாக மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கடந்தும் சிறுமி யாரிடமும் விஷயத்தை சொல்லாத நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது தாயாரிடம் தனக்கு நடந்த கொடூரம் குறித்து கூறியுள்ளார்.

போலீஸ் விசாரணை :

இதை கேட்டு அதிர்ந்தவர் மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தில் புகாரளித்ததன் பேரில் வாலிபரை கைது செய்த காவல்துறையினர், சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கயவனை கைது செய்தனர். இதனை தொடர்ந்து சிறுமிக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் ‌ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3