Victim Mallika | Tirupati Stampede (Photo Credit: @News18Tamilnadu/ @ANI X)

ஜனவரி 09, தலைமை செயலகம் (Chennai News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள திருப்பதி, திருமலை வெங்கடாசலபதி கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி மற்றும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு, இலவச தரிசன டோக்கன் வாங்க பக்தர்கள் காத்திருந்தனர். இன்று காலை 5 மணியளவில் வழங்கப்படவேண்டிய டிக்கெட், அதிக பக்தர்களின் வருகையால் நேற்று இரவே வழங்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சேலம், பொள்ளாச்சி பகுதிகளைச் சேர்ந்த 2 தமிழக பெண்கள் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டனர். இந்த விசயத்திற்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்தனர். வந்தது தித்திப்பு செய்தி.. மகளிர் உரிமை தொகை.. இன்றே வரவு வைக்கப்படும் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி.! 

தமிழ்நாடு முதல்வர் நிதிஉதவி அறிவிப்பு:

இதனிடையே, அம்மாநில அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.25 இலட்சம் இழப்பீடு அறிவித்து இருக்கின்றது. இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள மேச்சேரி பகுதியைச் சேர்ந்த மல்லிகா (வயது 50) என்பவர், தனது கணவர் கிருஷ்ணனுடன் திருப்பதி சென்று தரிசன டிக்கெட் வாங்கும் இடத்தில் உயிரிழந்தார். அவரின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின், ரூ.2 இலட்சம் நிதியுதவியும் அறிவித்து இருக்கிறார். தம்பதிகளின் குழந்தைகள் கொரோனா காலத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தற்போது மனைவியையும் இழந்து தவிப்பதாக கிருஷ்ணன் கண்ணீருடன் பேசினார். மேலும், தனது மனைவியை டிக்கெட் வாங்கும் ஆர்வத்தில் பலரும் ஏறி மிதித்து சென்றதாகவும் அவர் கண்ணீர்ப்பட தெரிவித்தார்.

மல்லிகாவின் குடும்பத்திற்கு இரங்கல் & ரூ.2 இலட்சம் நிதிஉதவி அறிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர்:

ஏற்கனவே குழந்தையை இழந்த, தற்போது மனைவியையும் இழந்த நபர் வேதனையுடன் பேட்டி: