Electrocution | Victim Kishor (Photo Credit: Pixabay / @Sriramrpckanna1 X)

மே 20, விழுப்புரம் (Viluppuram News): கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரின் மனைவி சிவசங்கரி. தம்பதிகளுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. இருவருக்கும் கிஷோர் ராகவ் (வயது 10), கிருத்விக் (வயது 7) என்ற மகன்கள் இருக்கிறார். கடந்த சில மாதமாக கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக, சிவசங்கரி தனது மகன் கிஷோர், கிருத்விக் ஆகியோருடன் விழுப்புரம் ராஜகோபால் தெருவில் தனியே வசித்து வருகிறார்.

மின்சாரம் தாக்கி சோகம்: அழகு நிலையத்தின் உரிமையாளராக இருந்து வரும் சிவசங்கரி, தனது மகன் கிஷோரை விரட்டிக்குப்பம், ராஜம் நகரில் இருக்கும் உறவினர் சிவகுமார் என்பவரின் வீட்டில் ஒப்படைத்துவிட்டு பணிக்கு சென்று வருவது வழக்கம். விழுப்புரம் நகரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு பயின்று வரும் கிஷோர், நேற்று மாலை 03:30 மணியளவில் தனது சகோதரருடன், அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தின் மேற்கூரையில் சிக்கிய பட்டத்தை மீட்க முயற்சித்துள்ளனர். Madurai Rains: தென்மாவட்டங்களை புரட்டியெடுக்கும் கனமழை; வீதிகளில் தேங்கி நிற்கும் மழைநீர்.!

சிறுவன் பலி: அச்சமயம் சிறார்கள் இருவரும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட, கிஷோர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், கிருத்விக் படுகாயத்துடன் உயிருக்கு துடிதுடித்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த உறவினர்கள் சிறார்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது கிஷோரின் பலி உறுதி செய்யப்பட்டது. கிருதிவிக் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விஷயம் குறித்து விழுப்புரம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலத்திலும் துயர சம்பவம்: இதேபோல, சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், மண்ணகவுண்டனூர் பகுதியில் ஊராட்சி குடிநீர்த்தொட்டியின் மோட்டார் இணைப்பு பகுதியில் விழுந்த கிரிக்கெட் பந்தை எடுக்கச்சென்ற 9 வயது சிறுவன் லிங்கேஸ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே மின்கசிவு குறித்து புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் காரணமாக சிறுவன் பலியானதாக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் கண்ணீர் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

எச்சரிக்கை: மழைக்காலங்களில் குழந்தைகளை தனியே விளையாட அனுமதிக்கும்போது, மின்சாதன பெட்டிகள் இருக்கும் இடங்களுக்கு செல்லக்கூடாது. வீட்டின் மேல்தளத்தில் இருக்கும்போது, மின்சார கம்பிகளுக்கு அருகே செல்லக்கூடாது என ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தைகளை அறிவுறுத்துவதே, எதிர்காலத்தில் இவ்வாறான துயரத்தை நடக்காமல் பார்க்க வழிவகை செய்யும். அதேபோல, மின்சார பிரச்சனைகள் குறித்த புகார்கள் கூறப்பட்டால், அதனை உடனடியாக அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.