Garbage Thrown from Running Train (Photo Credit: @gharkekalesh X)

மார்ச் 06, டெல்லி (Delhi News): இந்திய அரசுப்பொதுத்துறையில், மிகப்பெரியது இரயில்வே துறை. தொலைதூரம் மற்றும் உள்ளூர் பயணத்தை உறுதி செய்ய, இரயில்வே அதிகாரிகள் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனர். இந்திய இரயில்வே துறை நவீனமயமாகி வருகிறது. இரயில் பெட்டிகள் முதல் பணியாளர்கள் வரை பல்வேறு சிறப்பு அம்சங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. Telangana Shocker: காதல் விவகாரம்; காதலியின் தாயைக் கொல்ல முயன்ற காதலன்.. அதிர்ச்சி செயல்..!

ஓடும் இரயிலில் குப்பை வீச்சு:

இந்நிலையில், இரயிலில் வேலை பார்க்கும் பணியாளர் ஒருவர், இரயிலில் பயணிகள் சாப்பிட்டு மீதம் வைத்த குப்பைகள் மற்றும் பிற பொருட்களை, எந்த விதமான மனசாட்சியும் இன்றி கீழே வீசினார். ஓடும் இரயிலில் ஒவ்வொன்றாக அவர் எடுத்து வீசிய நிலையில், வேறொருவர் அதனை வீடியோ எடுக்கிறார் என்ற சலனமும் இன்றி அவர் தொடர்ந்து குப்பைகளை ஓடும் இரயிலில் இருந்து வீசினார். Fatty Liver Disease: 80 சதவீத ஐடி ஊழியர்களுக்கு கொழுப்பு கல்லீரல் நோய் பாதிப்பு.. கவனிக்க வேண்டிய அறிகுறிகள்..! 

உடனடி நடவடிக்கை எடுத்த இரயில்வே நிர்வாகம்:

இந்த விஷயம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியை, இரயில்வே துறையின் கவனத்திற்கு சென்றுள்ளது. இதனையடுத்து, இவ்விசயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள இரயில்வேத்துறை அதிகாரிகள், சிறப்பு இரயிலில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் கஞ்சன் லால் என்பவரை பணிநீக்கம் செய்தனர். மேலும், உணவு வழங்க ஒப்பந்தம் கோரிய ஒப்பந்ததாரரிடமும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இரயில்வே பணியாளர் எஞ்சிய குப்பையை வெளியில் எறியும் காட்சி: