Income Tax Returns Filing | ITR Filing 2025 (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 16, புதுடெல்லி (New Delhi News): ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் தனிநபர்களுக்கான வருமான வரி தாக்கல் செய்யப்பட வேண்டும். இதன் மூலமாக பணியிடங்களில் டிடிஎஸ் உட்பட பல்வேறு அரசு விதிகளின் கீழ் பிடித்தம் செய்யப்படும் தொகை மற்றும் வருமானத்தின் அளவு போன்றவை சரி பார்க்கப்பட்டு, உரியவர்களுக்கு வருமான வரி ரிட்டன்ஸ் (Income Tax Returns) வழங்கப்படும். 2024 - 2025ம் ஆண்டுக்கான வருமான வரித்தாக்கல் கடந்த ஜூலை 31 வரை அவகாசம் கொடுக்கப்பட்டது. பின் மீண்டும் அரசு சார்பில் செப்டம்பர் 15ம் தேதி வரை நீடித்து காலக்கெடு கொடுக்கப்பட்டது. RBI Recruitment 2025: ரிசர்வ் வங்கியில் அசத்தல் வேலைவாய்ப்பு.. 120 காலிப்பணியிடங்கள் மிஸ் பண்ணிடாதீங்க.! 

காலக்கெடு ஒருநாள் நீட்டிப்பு:

இந்த காலக்கெடு நேற்றுடன் நிறைவுபெற்ற நிலையில், ஒருசிலர் ஐடிஆர் தாக்கல் (ITR Filing) செய்வதில் தாமதம் செய்தனர். இதனால் கூடுதலாக ஒரு நாள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ள மத்திய வருமான வரித்துறை, செப்டம்பர் 16ம் தேதியான இன்று ஐடிஆர் பதிவு செய்துகொள்ள இறுதி காலக்கெடு வழங்கியுள்ளது. இந்த காலத்துக்குப்பின் ஐடிஆர் பதிவு செய்பவர்களுக்கு அபராத தொகையுடன் வருமான வரித்தாக்கல் முறை இருக்கும்.

வருமான வரி தாக்கல் செய்ய ஒருநாள் காலக்கெடு நீட்டிக்கப்பட்டது தொடர்பான அரசின் அறிவிப்பு: