Independence Day (Photo Credit : Team LatestLY)

ஆகஸ்ட் 07, சென்னை (Chennai News): மன்னர் ஆட்சிக்குப் பின் முகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்களிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியாவை மீட்டெடுத்து, சுதந்திரம் என்ற இனிமையான காற்று சுவாசிக்க நாம் கொடுத்த விலை, இழப்புகள் ஏராளம். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்தியாவின் சுதந்திர தின விழா (Independance Day) கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் நாம் கட்டாயம் சுதந்திரத்திற்கு முன் இருந்த இந்தியாவையும், அதனை மீட்டெடுத்த வரலாறையும் நினைவு கூற வேண்டும். அந்த வகையில், பள்ளி, கல்லூரி, அலுவலகங்களில் நடக்கும் சுதந்திர தின பேச்சு போட்டி (Independance Day Speech in Tamil) சிறப்பு செய்தி தொகுப்பு இத்துடன் லேட்டஸ்ட்லி தமிழ் இதழா ல் உங்களுக்காக இணைக்கப்படுகிறது.  Independence Day 2025: சுதந்திர தினம் கட்டுரை; வரலாறு, தியாகத்தில் மலர்ந்த இந்தியா..!

சுதந்திர தின பேச்சு போட்டி - சுதந்திர தினம் உரை (Suthanthira Dhinam Pechu 2025):

மதிப்பிற்குரிய தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள், பெற்றோர், என்னுடைய சக மாணவர்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்! சுதந்திர தினத்தை சுதந்திரத்துடன் கொண்டாட என்னுடன் கூடியிருக்கும் அனைத்து இந்தியர்களுக்கும் என் அன்பும்! நன்றியும்! இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து 78 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. ஒவ்வொரு சுதந்திர தினத்திலும் நாம் நமது தேசியக் கொடியை ஏற்றும்போது, நமக்கு வரும் உணர்வு எப்போதுமே மெய்சிலிர்க்க செய்கிறது. ஏனெனில், நமது வரலாறும், சுதந்திரப் போராட்ட தியாகங்களும், வீரங்களும் ஏராளம். எத்தனை ஆயிரம் லட்சம் பேரின் இரத்தங்கள், தியாகங்கள் சிந்தி உருவான சுதந்திரத்தில் பல போரும் போராட்டங்களும், அதன் அடையாளமாக இருக்கின்றன.

இந்தியா என்ற மிகப்பெரிய தேசத்தில் கொட்டிக் கிடந்த பொன், பொருள், இயற்கை வளங்களுக்காக வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், ஒரு கட்டத்தில் இந்தியாவையே தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தனர். பல கட்ட போராட்டத்திற்கு பின் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் அதாவது ஆகஸ்ட் 15ஆம் தேதியில் இந்தியாவுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் காந்தியின் அகிம்சை வழி போராட்டம் மிகப்பெரிய ஆயுதமாகவும் அமைந்தது. அகிம்சையாலும் ஒரு விஷயத்தை வெல்லலாம் என உலகுக்கு இந்தியா பல ஆண்டுகளுக்கு முன்பு உணர்த்திவிட்டது. பண்டைய மன்னர்கள் காலத்தில் ஆயுதங்களால் நாம் பல தேசங்களை ஆட்சி செய்திருந்தோம். அதற்குப்பின் ஆயுதம் இன்றி காந்தி என்ற நபருக்கு பின்னால் திரண்ட மக்கள் பேரணியால் சுதந்திரம் என்பது நம் வசமானது. இன்று நாம் சுதந்திரமாக வெளியே சென்று வருகிறோம். அரசுக்கு நமது உரிய வரியை செலுத்துகிறோம். அரசும் நமக்கு தேவையான அனைத்து விஷயங்களையும் செய்கிறது.

ஆனால் சுதந்திர காலத்தை நாம் நினைத்துப் பார்த்தால், நம் கண்ணில் ரத்தக்கண்ணீர் ஏற்படும் அளவிலான பல துயரங்கள் மட்டுமே நினைவில் இருக்கும். ஒவ்வொரு ஆண்டின் சுதந்திர தினத்திலும் நமது நாட்டின் விடுதலைக்காக போராடிய வீரர்களை நினைவு கூறுவது, வரலாற்றை அறிய வேண்டும் என்பது மட்டும் இல்லாமல், எதிர்கால இந்தியாவை உலகமே போற்றும் அளவு வியக்க வைக்கும் சாதனைக்கு கொண்டு செல்வதுதான் ஒவ்வொரு இந்தியரின் முதல் கடமையாக இருக்க வேண்டும். சுதந்திரம் என்ற ஆறு எழுத்து மந்திரம் ஒட்டுமொத்த இந்தியர்களின் தாரக மந்திரமாக இருக்க வேண்டும். வல்லரசு இந்தியா என்ற விஷயத்தை உருவாக்க ஒட்டுமொத்த இளைஞர்களும் இந்திய தேசத்தை உயர்த்திட பாடுபட வேண்டும். கல்வி, கட்டமைப்பு, பொருளாதாரத்தில் உலகம் நம்மை கண்டு வியக்கும் வகையில் இந்திய தேசத்தை வளமாக்க வேண்டும். எந்த தேசம் சென்றாலும், சுதந்திர தினத்தன்றும், நமது உரிமையை செலுத்தும் வாக்குப்பதிவு நாளன்றும் நமது சொந்த மண்ணுக்கு வந்து செல்ல வேண்டும். இது இந்தியாவில் நல்லாட்சிக்கும், அதன் பேரில் வளர்ச்சிக்கும் வித்திட நாம் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று எனது உரையை நிறைவு செய்கிறேன். வாழ்க இந்தியா! வளர்க தமிழ்நாடு! நன்றி.

ஜெய்ஹிந்த்!