IAF MiG-21 Fighter Aircraft Crash (Photo Credit: Tribune India / ANI)

மே 08, ஹனுமன்கர்க் (Rajasthan News): ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஸ்ரீ கங்கா நகர் (Sri Ganga Nagar, Rajasthan), சூரத்கர் பகுதியில் இந்திய விமானப்படை (Indian Air Force) தளம் உள்ளது. இது இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் இருக்கும் முக்கியமான விமானப்படை தளங்களில் ஒன்றாகும். இந்த விமானப்படை தளத்தில் இருந்து பெரும்பாலும் MiG 21 ரக போர் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான MiG-21 ரக போர் விமானம் தனது வழக்கமான கண்காணிப்பு மற்றும் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, விமானம் திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்ததாக தெரியவருகிறது. NEET Exam: “உள்ளாடையை கழட்டிட்டு வா” – நீட் தேர்வு எழுத சென்ற மாணவிக்கு நடந்த சோகம்…! சென்னையில் தேர்வு கண்காணிப்பாளர் கெடுபிடி.!

போர் விமானம் நேரடியாக தரையில் விழவிருந்த நிலையில், விமானி இறுதி நொடியில் விமானத்தில் இருந்து தப்பி காயத்துடன் உயிர்பிழைத்துக்கொண்டார். விமானம் நேரடியாக தரையில் விழுந்து நொறுங்கியது. விமானத்துடன் கொண்ட தகவல் துண்டானதால், சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

விமானம் தரையில் விழுந்த செய்தி அறிந்த உள்ளூர் மக்கள் திரளாக அங்கு திரண்டனர். போர் விமானம் குடியிருப்பு பகுதியில் விழுந்த நிலையில், வீட்டில் இருந்த 2 பெண்கள் பலியானதாகவும், 1 ஆண் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.