மே 08, சென்னை (Chennai News): இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புகளுக்காக நீட் நுழைவு தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தேர்வை எழுதி நுழைவுத்தேர்வில் வெற்றி அடைந்தால், மத்திய-மாநில அரசுகளின் இட ஒதுக்கீடுகள் கீழ் மருத்துவ படிப்புகளுக்கான வாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிலையில், நேற்று இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 95,824 மாணவிகளும், 51,757 மாணவர்களும் என மொத்தமாக 1,47,581 பேர் தேர்வு எழுதியுள்ளார். இதற்கிடையில், சென்னை மயிலாப்பூரில் உள்ள நீட் தேர்வு மையத்திலும் நீட் தேர்வு நடைபெற்றது. Gold Mine Fire Accident: தங்க சுரங்கத்தில் பயங்கர தீ விபத்து; 27 தொழிலாளர்கள் உடல் கருகி பலி., கண்ணீரில் உறவினர்கள்.!
தேர்வு எழுத வந்த மாணவியின் உள்ளாடையில் இரும்பு கொக்கி இருந்த நிலையில், அதனை கழற்றி தேர்வு எழுத வருமாறு தேர்வு மைய கண்காணிப்பாளர் வலியுறுத்தி இருக்கிறார். இதனால் மாணவி கண்காணிப்பாளருடன் வாதம் செய்தும் பலனில்லை.
இறுதியில் மாணவி தனது உள்ளாடையை கழற்றிவிட்டு தேர்வு எழுதிவிட்டு வந்துள்ளார். மன உளைச்சலோடு அவர் தேர்வை எழுதி வந்து இருக்கிறார். இவ்வாறான சம்பவம் கடந்த ஆண்டில் கேரளாவில் நடந்ததாக குற்றசாட்டு எழுந்த நிலையில், தமிழ்நாடு தேர்வு மையத்திலும் இப்படியான துயரம் நடந்துள்ளது.