ஜனவரி 26, சென்னை (Chennai News): இந்திய குடியரசு தினம் 2025 (Republic Day 2025) இன்று வெகுவிமர்சையாக சிறப்பிக்கப்படும் நிலையில், சென்னையில் உள்ள காமராஜர் சாலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி (RN Ravi), தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் (MK Stalin) தேசியக்கொடியை ஏற்றி வைத்து இராணுவ மரியாதையை ஏற்றுக்கொண்டனர். அதனைத்தொடர்ந்து இந்திய விமானப்படை, கடற்படை, இராணுவம், கடலோர காவல் படையினர், தமிழ்நாடு காவல்துறை, இந்திய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள டி19 இராணுவ பீரங்கி, ஐஎன்எஸ் விக்ராந்த் மாதிரி தோற்றம், வான் படையின் ஏவுகணைகள், கடலோர காவல்படை ஊர்தி சூர்ய தேஜா, முன்னாள் இராணுவ படைப்பிரிவினர், சிஆர்பிஎப் படையினர், ஆர்பிஎப் படையினர், தமிழ்நாடு காவல்துறை, ஆயுதப்படை பிரிவு அதிகாரிகள், பேரிடர் மீட்பு படை பரிவு, தீயணைப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், சாலை பாதுகாப்பு காவல்துறை அணிவகுப்புகளும் நடைபெற்றன. அணிவகுப்புகளை முன்னிட்டு சென்னை மாநகரில் 18 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில், மக்கள் கூடும் இடங்களில் சோதனையும் நடத்தப்படுகிறது. அணிவகுப்பு நிகழ்ச்சிகளை மக்களும் நேரில் கண்டு மகிழ்ந்தனர். Republic Day 2025: இந்திய குடியரசு தினம் 2025 கொண்டாட்டம்; கொடியேற்றிய ஆளுநர் ஆர்.என் ரவி.. நேரலை வீடியோ இதோ.!
விருதுகளை வழங்கி கௌரவித்த முதல்வர் (Republic Day Awards 2025):
அதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு முதல்வர் காவல்துறையில் (Best Police in Tamilnadu) சிறந்து விளங்கிய காவலர்களுக்கு பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வழங்கினார். அதன் விபரங்கள் பின்வருமாறு.,
1. வீரதீர செயலுக்கான அண்ணா விருது (Anna Award 2025) பெற்றவர் கே. வெற்றிவேல்
2. மதநல்லிணக்க பதக்கம் பெற்றவர் எஸ்.ஏ அமீர் அம்சா (விருது தொகையாக ரூ.5 இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது), கடந்த ஆண்டு ரூ.25,000 என இருந்த பரிசு தொகை, ரூ.5,00,000 என உயர்த்தி அறிவிக்கப்பட்டது.
3. அதிக உற்பத்திக்கான விவசாயிக்கான வேளாண்துறை விருது பெற்றவர் ஆர். முருகவேல்
4. காந்தியடிகள் காவலர் விருது (Gandhi Police Awards 2025) பெற்றவர்கள் விபரம்:
I) விழுப்புரம் மத்திய நுண்ணறிவு பிரிவு காவலர் பி. சின்னக்காமனன்
II) விழுப்புரம் மாவட்ட தலைமை காவலர் மகா மார்க்ஸ்
III) திருச்சி மாவட்ட மதுவிலக்குத்துறை தலைமை காவலர் கார்த்திக்
IV) சேலம் மாவட்ட ஆயுதப்படை பிரிவு இரண்டாம் நிலை காவலர் கா. சிவா
V) சேலம் மாவட்ட ஆயுதப்படை பிரிவு இரண்டாம் நிலை காவலர் ப. பூமாலை
5) சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு (Best Police Station Awards in Tamil Nadu 2025)
I) முதல் பரிசு - மதுரை மாநகரம்
II) இரண்டாவது பரிசு - திருப்பூர் மாநகரம்
III) மூன்றாம் பரிசு - திருவள்ளூர் மாவட்டம்
குடியரசு தின நிகழ்ச்சி அணிவகுப்புகள் நேரலை காணொளி:
அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்களை லேட்டஸ்ட்லி தமிழ் தெரிவித்துக்கொள்கிறது..