டிசம்பர் 26, டெல்லி (Delhi News): விமானங்களில் பயணம் செய்வோருக்கு ஒரு முக்கியமான செய்தி வந்துள்ளது. விமானப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மத்திய தொழில் பாதுகாப்பு படை மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இணைந்து லக்கேஜிற்கான விதிகளை (New Flight Luggage Rules) திருத்தியுள்ளன. Mother Suicide After Killing Children: 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!
லக்கேஜ் விதிமுறைகள்:
அதன்படி, எகானமி வகுப்பில் பயணம் செய்பவர்கள் தங்களுடன் அதிகபட்சம் 7 கிலோ எடையிலான ஒரு பையை மட்டுமே கையில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் வகுப்பு அல்லது பிசினஸ் கிளாஸில் பயணம் செய்பவர்கள் அதிகபட்சம் 10 கிலோ எடையிலான ஒரு பையை மட்டுமே கையில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பையின் உயரம் 55 சென்டிமீட்டருக்கு மிகாமலும், நீளம் 40 சென்டி மீட்டர் மற்றும் அகலம் 20 சென்டி மீட்டருக்குள்ளும் இருக்க வேண்டும். கேபின் லக்கேஜ்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தி, தாமதங்களைக் குறைத்து, போர்டிங் செயல்முறையை விரைவுபடுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.