ஜனவரி 21, சென்னை (Agri Tips): வெளி நாடுகளிலும், வட மாநிலத்திலும் அதிகம் பயிரிடப்படும் கருமஞ்சளை (Black Turmeric) குறைந்த அளவில் சாகுபடி செய்து வருகிறார் திருச்சி, துறையூரை சேர்ந்த விவசாயி தனகோபாலன். சம்மங்கி, ரோஜோ போன்ற மலர்களை முதன்மை பயிராக சாகுபடி செய்து வரும் இவர், புதிய ரக பயிர்கள், அதிகம் தமிழகத்தில் பயிரிடாத பயிர்களை தேடி எடுத்து விளைவிப்பதில் ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். புதிய ரக மலர்கள், சிவப்பு இஞ்சி போன்ற அரிய பயிர்களை பயிர் செய்கிறார். அந்த வரிசையில் கருமஞ்சளை 3 ஆண்டுகளாக விளைவித்து வருகிறார். மேலும் கருமஞ்சள் பற்றியும் எடுத்துரைக்கிறார் தனகோபலன், இந்த கருமஞ்சள் செடி பார்ப்பதற்கு சாதாரண மஞ்சள் போன்றே இருக்கும். ஆனால் இலையில் நடுவில் உள்ல தண்டு கருப்பு நிறத்தில் இருக்கும். கிழங்கு சற்று தடினமாகவும், உட்புறம் நீல நிறத்திலும் இருக்கும். Creative Balcony Ideas: உங்க வீட்டு பால்கனியை அழகாக மாற்ற வேண்டுமா? அசத்தல் டிப்ஸ் இதோ.!
கருமஞ்சள் சாகுபடி:
இந்த கருமஞ்சள் மற்ற ரக மஞ்சள் பயிரைப் போன்றே விளைவிக்க வேண்டும். நல்ல வடிகால் வசதியுடைய அனைத்து மண் வகைகளிலும் இது நன்கு வளரும் திறன் கொண்டது. மஞ்சளை எவ்வாறு உழுது, உரமளித்து 4 செ.மீ ஆழத்தில் நடவு செய்ய வேண்டுமோ அதை போலவே இதையும் நடவு செய்ய வேண்டும். ஆனால் இது சற்று நிழலுள்ள பகுதியில் விளைவிக்கலாம். நேரடி சூரிய வெளிச்சத்தில் இவை வளர்வதில்லை. பயிர்களுக்கு இடையில் ஊடுபயிராக வளர்க்கலாம்.
கருமஞ்சள் பயன்கள்:
கருமஞ்சள், கருந்துளசி, கருஞ்சீரகம் போன்றவை சித்த மருத்துவத்தில் மூலிகைகளாகவே போற்றப்படுகிறது அதே போலும் இந்த கருமஞ்சள் சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவத் துறையில் அதிகம் பயன்படுகிறது. மேலும் இதற்கு புற்றுநோயைக் குணப்படுத்தும் திறனும் உள்ளது. காய்ச்சல், மூட்டுவலி, சருமப் பிரச்சனைகள், வயிற்றுப்பிடிப்பு, இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய், நிமோனியா போன்ற பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கிறது. மேலும் நோய் எதிர்ப்பு மண்டத்தின் திறனை அதிகரிக்கிறது. வெளிநாடுகளிலு அதிகம் இந்த கருமஞ்சள் மருத்துவத் துறையில் ஈடுபடுகிறது. Republic Day 2025: 76-வது இந்திய சுதந்திர தினம்: ராஜ்பாத் கொண்டாட்டம், வாழ்த்துச்செய்தி.. விபரம் இதோ.!
செல்வம் சேர்க்கும் கருமஞ்சள்:
மருத்துவத்தை விட இந்த கருமஞ்சள் ஆன்மீகத்தில் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. வீட்டில் இந்த மஞ்சளை வைப்பது வீட்டில் செல்வத்தை பெருக்கும், வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று நம்புகின்றனர். அதனால் பலரும் இதன் கிழங்கை பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றனர். மேலும் பலரும் இதை அலங்கார செடியாக வீட்டில் வளர்கின்றனர். காளிக்கு இந்த கருமஞ்சள் உகந்தது என வடமாநிலத்தவர்கள் கருதுகின்றனர்.
இந்த கருமஞ்சளுக்கு இங்கு சரியான சந்தைபடுத்துதல் இல்லாததால், வருமான நோக்கத்திற்காக இதை அதிகளவில் வளர்க்க முடியாது. அதிகளவில் உற்பத்தி செய்தால் அதிக வற்வேப்பு இருக்கும் ஜெய்ப்பூரில் விற்கலாம். ஆனால் அப்போது இருக்கும் தேவையைப் பொருத்தே விலை நிர்ணயமாகும். அதனால் கருமஞ்சளை சிறிய அளவில் வளர்த்து, மருத்துவத் துறைக்கோ, அலங்கார செடிகளாக நேரடியாகவோ அல்லது நர்சரிகளுக்கோ தரலாம் எனக் கூறுகிறார் தனகோபலன்.