
பிப்ரவரி 14, புதுடெல்லி (New Delhi News): சமீபத்தில் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தில் வேலைக்காக குடி பெயர்ந்து வருவது அதிகரித்து வருகிறது. கோவை, திருப்பூர், போன்ற தொழில் நகரங்களில் வேலை செய்வதற்காக வருகின்றனர். அதிலும் வடஇந்தியாவிலிருந்து வரும் முன்பதிவு செய்த ரயில் பெட்டிகளில் அவர்கள் டிக்கெட்டுகள் கூட எடுக்காமல் வருகிறார்கள் என்றும், பொது மக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் எல்லாம் வட மாநிலத்தவர் தொல்லைகள் அதிகரிப்பதாகவும், அவ்வப்போது தமிழர்களை வட மாநிலத்தவர்கள் அடித்து துன்புறுத்துவதாகவும் பல கருத்துக்கள் இணைய தளத்தில் பேசப்பட்டு வருகிறது.
வடமாநிலத்தவர்கள் பற்றிய ஒரு கேலி வீடியோ:
பிரபல யூடியூப் சேனலான ‘பரிதாபங்கள்’, வடமாநிலத்தவர்கள் பற்றிய ஒரு கேலி வீடியோவை வெளியிட்டு வைரல் ஆனது. இதில் தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தமிழர்களை விட குறைவான சம்பளத்தில் வேலை செய்வதாகவும், குடும்பமாக குறைவான சம்பளத்தில் வேலை செய்யதற்காக வருவதாகவும் அந்த காட்சி இடம் பெற்றிருந்தது. மேலும் தமிழர்களுக்கே வேலை இல்லை இதில் வேற்று மாநிலத்தவர்கள் இங்கு இருக்கும் வேலைகளை குறைவான சம்பளத்தில் செய்து வந்தால் தமிழர்கள் தான் சொந்த மண்ணில் அகதிகளாக இருக்கும் நிலைமை வரும் அரசு இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் அனைவரும் கருத்துகளை மீம்ஸ்களைத் போட்டுக் கொண்டுள்ளனர். அதற்கேற்றார் போல் அவ்வப்போது வட மாநிலத்தவர்களுக்கும், தமிழர்களுக்கும் சண்டைகள் நிகழ்ந்தும் வருகிறது. Maha Kumbh Mela Viral Girl: சிறப்பு அழைப்பாளராக கேரளா செல்லும் இந்தியாவின் 'மோனாலிசா'.. காரணம் என்ன..?
சமீபத்தில் திருப்பூரில் வட மாநிலத் தொழிலாளர்கள் தமிழர்களை விரட்டியடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பேசு பொருளானது. ஆனால், அது தேநீர் கடையில் நடந்த தகராறின் விளைவு என்றும், வேலை சம்பந்தப்பட்ட பிரச்சனை எதுவும் இல்லை என்றும் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் தெரிவித்திருந்தார். அதே போல் ரயில்களில் தமிழர்கள் வட மாநிலங்களில் இருந்து வருபவரை மிரட்டுவது போன்ற வீடியோக்களும் வெளிவந்தவாறே உள்ளது.
வட மாநிலம் எனக் குறிப்பிட்டாலும் ஜார்கண்ட், ஒடிசா,பிகார், உத்திரபிரதேசம், போன்ற மாநிலங்களில் இருந்து தான் பெரும்பான்மையான தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகின்றனர். கட்டுமானம் மற்றும் ஆடை உற்பத்தியில் மட்டும் வேலை செய்து வந்த வேறு மாநிலத்தவர் தற்போது ஹோட்டல், செக்யூரிட்டி, மின் சாதன பொருட்கள் சரிசெய்யும் தொழில், சிலர் தொழிற்சாலைகள் என அனைத்திலும் ஈடுபடுகின்றனர். மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் பூஜை செய்பவர்கள் முதற்கொண்டு மத்திய அரசு வேலைகள் என அனைத்திலும் ஹிந்தி தெரிந்தவர்கள், மற்றும் பிற வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பிட்ட பகுதியில் வேலை பார்த்து வந்தவர்கள் தற்போது தமிழகம் முழுவதிலும் வேலை செய்து வருகின்றனர்.
நடக்கும் அநியாயங்கள்:
பொரும்பான்மையான முதலாளிகள் இவர்களை வேலைக்கு எடுப்பதன் காரணம், இவர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் மற்றவர்களுக்கு கொடுப்பதை விட 30% குறைவு. மேலும் இவர்கள் நேரம் பாராமல் அதிகப்படியான கடின உழைப்பையும் தருகின்றனர். மேலும் பண்டிகை காலங்களில் விடுமுறை, அதிக ஊதியம் போன்றவையை எதிர்பார்க்காமல் வேலை செய்கின்றனர். இதனால் தான் அவர்களை வேலைக்கு சேர்த்து கொள்கின்றனர் முதலாளிகள்.
தமிழகத்திற்கு வேலைக்கு வருபவர்கள் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் வர போதிய படிப்பின்மையும் அவர்களின் அறியாமையுமே காரணம். இவர்களை ஏஜெண்டுகள் குறைந்த சம்பளத்திற்கு அழைத்து வந்து இங்கு வேலைக்கு சேர்த்து அதில் கமிசன் பார்க்கின்றனர். தென்னிந்திய ரயில் நிர்வாகமும் இதை கண்டு கொள்ளாமல் இருக்கிறது. மற்றும் இவர்கள் வசிக்கும் பகுதிகளில் வடமாநிலத்தை போல் பாக்கு துப்பி இடத்தையும் அதிகளவில் அசுத்தப்படுத்தி வருவதும் பொது மக்களை எரிச்சலைடைய வைக்கிறது. மேலும் இவர்கள் இங்கு வந்த பின் என்ன செய்கிறார்கள், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனிக்காமல் மாநில அரசும் செயல்படுகிறது. இதற்கு தமிழக மக்கள் தாங்களாகவே அடக்குமுறையை கையில் எடுத்து, இங்கு வருபவர்களும் கிளர்ச்சியாளர்களாக மாறி, பூதாகரமாக வெடிப்பதற்கு முன் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.
இந்தியர் யாராக இருந்தாலும் அவர்கள் நமது நாட்டிற்குள் எங்கு சென்று வேண்டுமானாலும் பணிபுரியலாம். அனைவரும் அவர்களின் குடும்பத்திற்காகவும் தங்களின் எதிர்கால வாழ்கைகாகவும் உழைக்கவே பாடுபடுகின்றனர். அவர்களுக்கு அங்கு சரியான வேலையோ அல்லது படிப்போ இல்லாததாலேயே இங்கு வந்து பணிபுரிகின்றனர். தமிழர்கள் படித்து வெளிநாடுகளுக்கும், டெல்லி, மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களுக்கு வேலைக்கு செல்வது போன்றே அவர்களும் வருகின்றனர். அவர்களை திரும்பி போ என்றில்லாமல் சரியான விதிமுறைகளை பின்பற்றும் படி நடவடிக்கைகள் எடுக்கலாம்.
இந்திய அரசின் பத்திரிகை தகவல் அமைப்பான பிரஸ் இன்ஃபர்மேஷன் ப்யூரோ (PIB) ஏப்ரல், 2022-இல் வெளியிட்ட தகவலின்படி, தமிழ்நாட்டில் 34.87 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுள் பெண்கள் 7.13 லட்சம் பேர், ஆண்கள் 27.74 லட்சம் பேர்.